.மதுரையில், பிளஸ் 2 உயிரியல்
தேர்வில், விலங்கியல்
பகுதி விடைத்தாளில்,
தாவரவியல் பகுதிக்கான
பதில் எழுதிய
சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்.
விடைத்தாள் அமைப்பு உட்பட தேர்வுத் துறையில்,
இந்தாண்டு பல்வேறு
மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, உயிரியல்
தேர்வில்,
விலங்கியல், தாவரவியல் என இரு பகுதிகளுக்கும்
தலா 26 பக்கம்
கொண்டதாக விடைத்தாள்
தயாரிக்கப்பட்டன. தேர்வின்போது, இந்த இரண்டு விடைத்தாள்களும்
மாணவர்களுக்கு வழங்கப்படும். அதற்குரிய விடைத்தாளில் தான்
விடைகள் எழுத
வேண்டும். ஏனென்றால்,
விடைத்தாள் திருத்தும்போது, விலங்கியல்,
தாவரவியல் பகுதிகளை
தனித்தனி ஆசிரியர்கள்
திருத்தி, மதிப்பெண்
வழங்குவர். இந்த முறையை, தேர்வு அறையில்
மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி விடைத்தாள்கள்
வழங்க, தேர்வுத்
துறை அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், மதுரையில்
உள்ள ஒரு
மையத்தில், விலங்கியல் பகுதி விடைத்தாளில் விடை
எழுதி முடித்த
மாணவிகள் சிலர்,
தொடர்ந்து தாவரவியல்
கேள்விகளுக்கான விடையும் எழுதிவிட்டனர். இது தாமதமாக
கண்டுபிடிக்கப்பட்டது. விடைத்தாள்களை இரண்டு
ஆசிரியர்கள் திருத்துவதால், விலங்கியல் பகுதியில் எழுதப்பட்ட
தாவரவியல் விடைக்கான
மதிப்பெண் சிக்கல்
இல்லாமல் கிடைக்குமா
என்ற அச்சத்தில்
மாணவிகள் உள்ளனர்.
இது, சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின்
பெற்றோர் சம்பந்தப்பட்ட
தேர்வு மையத்திற்கு
சென்று, "கல்வி அதிகாரிகளுக்கு முறையாக இப்பிரச்னையை
தெரிவித்து, விடைத்தாள் திருத்தும் போது சம்பந்தப்பட்ட
மாணவிகளுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் இருக்காமல்
நடவடிக்கை எடுக்க
வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.