கடந்த 8ம் தேதி
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்
சென்றது மலேசிய
விமானம். விமானத்தில்
சென்ற 239 பேரில்
சென்னையைச்சேர்ந்த ஒருவர்
உட்பட 5 பேர்
இந்தியர்கள்.
239 பயணிகளுடன் சென்ற
இந்த விமானம்
காணாமல் போனது. விமானம்
பற்றி தினமும்
ஒவ்வொரு செய்தி
வந்த வண்ணம்
இருக்கின்றன. உறுதியான
செய்தி வரவில்லை.
இந்நிலையில், மலேசிய
பிரதமர் நஜீப்
ரசாக் முக்கிய
அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளார். அவர்,
‘’மலேசிய விமானம் இந்தியப்பெருங்கடலில்
விழுந்திருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர் . விமானத்தில்
பயணம் செய்த
யாரும் உயிர்
பிழைத்திருக்க வாய்ப்பில்லை. பயணிகளின் குடும்பத்திற்கு
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.
துன்பியல் சம்பவம்
ReplyDelete