Pages

Monday, March 24, 2014

239 பயணிகளுடன் காணாமல் போன விமானம் : மலேசிய பிரதமர் முக்கிய அறிவிப்பு

கடந்த 8ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங் சென்றது மலேசிய விமானம். விமானத்தில் சென்ற 239 பேரில்
சென்னையைச்சேர்ந்த  ஒருவர் உட்பட 5 பேர் இந்தியர்கள்.

 239 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் காணாமல் போனது.  விமானம் பற்றி தினமும் ஒவ்வொரு செய்தி வந்த வண்ணம் இருக்கின்றன.   உறுதியான செய்தி வரவில்லை.

இந்நிலையில்,  மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர்,  ‘’மலேசிய விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்திருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர் .  விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.   பயணிகளின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’’என்று தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. துன்பியல் சம்பவம்

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.