Pages

Thursday, March 27, 2014

கலவரத்தில் உயிரிழக்கும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு

கலவரத்தில் பலியாகும் தேர்தல் அலுவலர்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது எதிர்பாராமல் நிகழும் கலவரங்கள், வெடிகுண்டு தாக்குதல்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க மாநில அரசுகளை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
வன்முறை சம்பவங்களால் கை,கால் உள்ளிட்ட உறுப்புகளை இழக்க நேரிட்டாலோ, கண் பார்வை பாதிக்கப்படாலோ ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கை மாநில தேர்தல் ஆணையர்கள், தலைமைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் அதிகாரிகள், அமைச்சர்கள் காணொலி காட்சி முறையில் கூட்டம் நடத்தக்கூடாது என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு உள்ளிட்ட தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலி மூலம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் இது தொடர்பான சி.டி தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

1 comment:

  1. manitha uyirgal apdi maidupu ilanthu poivitatha alathu panatgirku pinal makal senru viduvar enra nambikaiya????????

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.