Pages

Saturday, March 22, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்தப் பணி, 31ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்) தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 முதல், 25ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது. முதல் தாளுக்கு நடந்ததைப் போல், ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது. 

6 comments:

  1. hai, if any one of ur friend were passed in english(bcm) pls update their details im sheik frm tirunelveli wei 69 tm 90

    ReplyDelete
  2. Hi I'm English (mbc)
    my wt 60

    ReplyDelete
  3. life full of pain enna seiya above 90 i will attend the susiude

    ReplyDelete
  4. friends itha monkitta govt padam karpikka pls decide vote dmk or unglkku viruppamana avargali select seiyungul

    ReplyDelete
  5. To take action for that for that teachers

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.