Pages

Tuesday, March 18, 2014

பிளஸ் 2 தேர்வு: வேதியியல், கணக்குபதிவியலில் பிட் அடித்த 35 பேர் சிக்கினர்

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் பிட் அடித்த 35 பேர், பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கினர். பிளஸ் 2 தேர்வு 3ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மருத்துவம் பொறியியல் படிப்புகளுக்கு முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படும் இயற்பியல், கணக்கு, விலங்கியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று வேதியியல் பாடத் தேர்வு நடந்தது.
அத்துடன் கணக்குப் பதிவியல் பாடத் தேர்வும் நடந்தது. இந்நிலையில், தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்த பறக்கும் படையினர், தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்துள்ள நிலையான பறக்கும் படையினர், அண்ணா பல்கலைக் கழக பறக்கும் படையினர் நேற்று அனைத்து தேர்வு மையங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு தேர்வு மையங்களில் பிட் அடித்ததாக 35 பேரை பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். அவர்களில் வேதியியல் பாடத்தேர்வில் நெல்லை 8, தேனி 2, திருவண்ணாமலை 6, தஞ்சாவூர் 2, வேலூர் 2 என 20 பேர் சிக்கினர். கணக்குப் பதிவியல் பாடத் தேர்வில் நாமக்கல் 1, சென்னை 2, ராமநாதபுரம்1, திருவண்ணாமலை 3, கரூர் 1, அரியலூர் 1, வேலூர் 5, கடலூர் 1 என 15 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதையடுத்து 20ம் தேதி உயிரியல் தேர்வு நடக்கிறது. இடையில் இரண்டு நாட்கள் விடுமுறை. பத்தாம் வகுப்பு தேர்வுக்கான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு மையமாக மட்டும் செயல்படும் அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் இன்று அந்தந்த கல்வி மாவட்டத்தில் உள்ள மண்டல மையத்தில் இருந்து தங்கள் தேர்வு மையங்களுக்கு தேவையான விடைத்தாள்கள், படிவங்கள் மற்றும் உறைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் அனைத்து தேர்வு மையங்களிலும் முதன்மை விடைத்தாளில் முகப்பு சீட்டு வைத்து தைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.