Pages

Wednesday, March 19, 2014

18 வயது முடிந்த புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் சட்ட சிக்கல்

பதினெட்டு வயது முடிந்த இளம் வாக்காளர்களை உடனடியாக வாக்காளர்கள் பட்டியலில் சேர்ப்பதில், சட்டச் சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்தின் திட்டம், உடனடியாக நிறைவேற வாய்ப்பில்லை என்று தெரியவந்துள்ளது. 18 வயது பூர்த்தியான வாக்காளர்களை உடனுக்குடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதியை கணக்கில் கொண்டு, அந்த தேதிக்குள் 18 வயது ஆனவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், இதற்கு ஜனவரி 1ம் தேதியை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ள முடியாது என்றும், இதற்கு பல்வேறு காலக்கெடு தேதிகளை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது என்றும் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஜனவரி 2ம் தேதி ஒருவருக்கு 18 வயதாகிறது என்று எடுத்து கொண்டால், அந்த ஆண்டில் அவர் வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்து கொள்ள முடியாது. ஒரு நாள் தாமதமாக பிறந்ததற்காக, அடுத்த ஆண்டு வரையில் காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் தேர்தல் இல்லை என்றால், முதல் முறையாக வாக்களிக்க அவர் பல ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தேர்தலை பற்றிய அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். இதன் காரணமாக, 18 வயது பூர்த்தியாவதை பல்வேறு தேதிகளில் கணக்கில் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அரசியல் சட்டத்தில் புதிய திருத்தம் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1970ம் ஆண்டில், புதிய வாக்காளர்களை ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளின் அடிப்படையில் சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்தக் காரணத்தினாலோ அது அமல்படுத்தப்படவில்லை.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.