Pages

Wednesday, March 26, 2014

செயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்கள்: மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரம்

இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு அறிவித்துள்ள விமானத்தின் உடைந்த பாகங்களை தேடும் பணியை  ஆஸ்திரேலியா துவக்கியுள்ளது.


 ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 2500 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ஆஸ்திரேலியா தேடி வருகிறது. இந்நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் 122 பொருட்கள் கடலில் மிதப்பதாக செயற்கைகோளில் பதிவாகியுள்ளது .அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஸ்கமுதின் உசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே மாயமான விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள், மலேசிய அரசு மிது குற்றம்சாட்டியுள்ளார்.  மலேசிய அரசு விமானம் குறித்த தகவல்களை மறைப்பதாகவும், பொய்யர்கள் என்றும் ஆவேசமாக தெரிவித்தனர்.  மேலும் மலேசிய அரசுக்கு எதிராக சீனாவும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

விமானத்தில் பயணம் செய்த 230 பேரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.