Pages

Friday, March 21, 2014

10ம் வகுப்பு வினாத்தாள்கள் வருகை

விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா தாள்கள் நேற்று விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழவதும் 10ம் வகுப்பு பொது தேர்வு வரும் 26ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதியுடன் முடிகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், 46 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்களும், 6 ஆயிரம் தனித்தேர்வர்களும் பங்கேற்கின்றனர். இதற்காக 150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாணவர்களுக்கான வினாத் தாள்கள் நேற்று மாலை விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. சி.இ.ஓ., மார்ஸ் முன்னிலையில் அந்தந்த மையங்களுக்கு வினாத்தாட்களை அனுப்புவதற்காக பணியில், அலுவலர்கள் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.