Pages

Tuesday, March 18, 2014

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது.
மத்திய அரசை போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரிய சங்கங்கங்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை மாநில அரசு இதுதொடர்பாக உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, மத்திய அரசு ஊழியர்களை போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப்படி வழங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் விரும்புகின்றனர்.

3 comments:

  1. Varum.. ana varathu.. kilampuvoma.

    ReplyDelete
  2. ippa kuduttha maraunthu poiruveengalla election datekku pakkama arivippomla

    ReplyDelete
  3. கலைஞர் ஆட்சியா நடக்கு. உடனே கொடுக்க

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.