வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 29ம் தேதி வரை நடந்தன. மொத்தம் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுகள் நடந்த போதே, கேள்வித்தாள்கள் இமெயிலில் அனுப்பப்பட்டது, ஜெராக்ஸ் எடுத்து வினியோகிக்கப்பட்டது என்று குளறுபடிகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் காண வந்த மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தேர்வுகளை எழுதாமல் ஆப்சென்ட் ஆன தாகவும், பல மாணவர்களின் பதிவு எண்கள் வேறு படிப்பை படிக்கும் மாணவர்களது எண்களாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவசரம், அவசரமாக மறுநாள் இரவே தேர்வு முடிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அதிலும் குளறுபடிகள் எதிரொலித்தன. இந்தமுறை பல மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை காட்டிலும் கூடுதலாக மதிப்பெண்களை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம். குறிப்பாக, கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி படிக்கும் 15 பேரின் மதிப்பெண் பட்டியலில், ஒரு பாடத்துக்கு இன்டர்னல் மதிப்பெண் 25 மதிப்பெண்கள் என்றால், எக்ஸ்டெர்னல் மதிப்பெண்கள் 75 ஆகும். ஆனால், எக்ஸ்டெர்னல் மதிப்பெண் 75 மதிப்பெண்களுக்கு மேல் போடப்பட்டு ஒவ்வொரு மாணவனுக்கும் 100க்கு 101, 102, 107 என்று மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment