Pages

Tuesday, March 25, 2014

10ம் வகுப்பு தேர்வு: 7.31 லட்சம் பேருக்கு கட்டணம் ரத்து

"நாளை 10ம் வகுப்புத் தேர்வு துவங்குகிறது. தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வை எழுத உள்ள 7.31 லட்சம் மாணவ, மாணவியருக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது" என தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்து உள்ளார்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வு கேள்வித்தாள்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இருக்கும். அத்துடன், இந்த பாட தேர்வுகளில், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, இந்தி, குஜராத்தி ஆகிய சிறுபான்மை மொழிகளிலும், கேள்வித்தாள் வழங்கப்படும். சென்னை, புழல் மத்திய சிறையில், 45 சிறைவாசிகளும், 74 சிறைவாசிகள், திருச்சி மத்திய சிறையிலும், பத்தாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்து உள்ளார். கடந்த 3ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்றுடன் முடிகிறது. விடைத்தாள் திருத்தும் பணி, நேற்றே துவங்கிவிட்ட நிலையில் தேர்வு முடிவை வரும் ஏப்ரல் இறுதியிலேயே எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.