Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 15, 2014

    ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்

    * தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

    * பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய
    விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

    * தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும்.


    * ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

    * வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .

    * மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

    * 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

    * வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

    * எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

    * அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம்.
    மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்சமாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

    - தோழமையுடன் - 
    தேவராஜன், தஞ்சாவூர் .

    3 comments:

    Unknown said...

    1. G.O. Ms. No. 157, P & A.R (F.R. III) dated 24-06-1994
    2. Govt. Letter No. 60665/F.R. III / 95-1, P & A.R. Dept., dated 02-11-1995

    பார்வை (1) அரசு ஆணை மற்றும் விளக்க்க் கடிதம் (2) – ன் படி அரசு ஊழியர்களுக்கு 01-07-1994 முதல் அசாதாரண விடுப்புகளுக்கு மட்டுமே (Extrordinary Leave without Pay and allowances/LLP) ஈட்டிய விடுப்பு பிடித்தம் செய்ய்யப்படுகிறது. மருத்துவ விடுப்பிற்கு ஈட்டிய விடுப்பு பிடித்தம் செய்வது நடைமுறையில் இல்லை.

    இதுபோன்ற அடிப்படை உரிமைகளில் அரசு ஊழியர்களூக்கு ஒரு நிலை ஆசிரியர்களுக்கு ஒரு நிலை இருக்க முடியுமா?. தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

    Anonymous said...

    I surrendered EL in the probationary period. will it affect my probationary? ? or I have to complete 3years to complete probationary? ?

    Anonymous said...

    EL Surrender will not affect your probationary period. If you take leaves other than CL & RL during probation, corresponding number of days will extend for completion of probation.