Pages

Thursday, February 27, 2014

ஸ்டிரைக் செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டனர்.

கடந்த 25ம் தேதி பள்ளிக்கு வருகை புரிந்தும், பாடம் நடத்தாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ம் கட்டமாக நேற்று தற்செயல் விடுப்பு பெற்று, பள்ளிக்கு வருவதை தவிர்த்தனர். போராட்டத்தின் போது மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனர் நேற்று, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார். இது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நேற்று தற்செயல் விடுப்பு பெற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் மூலம், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை அடங்கிய பட்டியல், சென்னைக்கு நேற்று காலை 11:00 மணிக்கு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

4 comments:

  1. ITS TOO BAD TO HEAR.

    ReplyDelete
  2. நான் ,தபால் ஓட்டு சீட்டை அம்மா கட்சிக்கு போட்டதைக் காட்டி விசாரணையில் தப்பித்துவிடுவேன்.

    ReplyDelete
  3. நடந்து முடிந்தபோராட்டத்தில்கலந்துக்கொண்ட 55000 ஆசிரியர்கள் அவர்கள்சார்ந்த ஓட்டுக்கள் 6ந்தேநி கலந்துக்கொள்ள போகும் 65000 ஆசிரியர்கள் அவர்கள் சார்த ஓட்டுக்கள் பிரிந்தாள் அம்மா எவ்வாறு 40 சிட்டுகள் வெற்றிபெற முடியும் சிந்திப்பீர். கல்வித்துறை அதிகாரிகளே...

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.