Pages

Sunday, February 2, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண் தளர்த்தப்படுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் இந்திய குடியரசு கட்சி எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் வலியுறுத்தினார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது சனிக்கிழமை அவர் பேசியது: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பங்கம் ஏற்பட்டபோது, அதை காத்தவர் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி முறையில் இடஒதுக்கீட்டு முறை என சிலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதை அரசியலாக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது பொதுவான பிரச்னையாகும். எனவே, இதற்கு தகுந்த வழியை முதல்வர் ஜெயலலிதா உருவாக்குவார் என நம்புகிறேன் என்றார் தமிழரசன்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.