அனைவருக்கும் தரமான இலவச கட்டாயக் கல்வியை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திó மேற்கொள்ளப்படும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் ரத யாத்திரைக்குத் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மையப்படுத்தி இக்கூட்டணி மேற்கொள்ளும் யாத்திரை கடந்த 1-ம் தேதி சென்னையில் தொடங்கியது.
பெரம்பலூர் வழியாக ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த குழுவினருக்கு வரவேற்பு விழா ஜங்ஷன் காதி கிராப்ட் முன்பு நடைபெற்றது. கூட்டணியின் மாநகரத் தலைவர் ம.ஜேம்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜோ. ஆல்பர்ட்தாஸ் முன்னிலை வகித்தார்.
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் சு. ஈஸ்வரன் யாத்திரை நோக்கம் குறித்து பேசினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு, இம்மாதம் 27-ம் தேதி தில்லியில் நிறைவடைய உள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் ந.ரங்கராஜன் வாழ்த்திóப் பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றன. முன்னதாக கூட்டணியின்மாநகரச் செயலர் சே. நீலகண்டன் வரவேற்றார். மேற்குச் செயலர் அ. ராபர்ட் அந்தோனிராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.