Pages

Thursday, February 20, 2014

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகத்தில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்கள்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல் இருந்த இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை
அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமனஆணைகளை வழங்குவதன் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதர்,ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.