Pages

Wednesday, February 5, 2014

இணையதளம் மூலம் அதிகாரிகள் செயல்திறன் மதிப்பீடு

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை, கணினிமயமாகிறது. ஏப்ரல் முதல் இந்த அறிக்கை, இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும்.


நாடு முழுவதும், 4,500 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர். இவர்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும், மத்திய, மாநில அரசுகள் தயாரிக்கின்றன. தற்போது, எழுத்துப்பூர்வமாக அறிக்கைகளை தயாரித்து அவற்றை, அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவது போன்ற பணிகள், ஒவ்வொரு துறையாக செல்வதால் தாமதமாகி வருகிறது. இந்த விவகாரத்தை சரிசெய்ய இணையதளம் மூலம், செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும், அதிகாரிகள் மற்றும் அரசுக்கு அனுப்பி வைக்கவும், பெறவும், இந்த முறை பயன்படும்.

இதனால் ஒவ்வொரு ஆண்டின் அறிக்கை, அந்த ஆண்டிலேயே, சரிவர மேற்கொள்ளப்படும். இதனால் அதிகாரிகளின் பணி உயர்வு, பணிமூப்பு, ஊக்க ஊதியம் போன்றவற்றை எளிதாக மேற்கொள்ளும் நிலை ஏற்படும். மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் இந்த புதிய முறை, ஏப்ரல் முதல் பின்பற்றப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.