Pages

Sunday, February 2, 2014

எறும்புகள் பேசுவதில்லை, செயலில்தான் காட்டும் என மனிதவள மேம்பாட்டு பயற்சியாளர் லெ .நாராயணன் தெரிவித்தார்

Thanks & Regards, L.Chokkalingam, Head Master,

Chairman Manicka Vasagam School, Devakottai. 9786113160




எறும்புகள் பேசுவதில்லை,செயலில்தான் காட்டும் என மனிதவள மேம்பாட்டு பயற்சியாளர் லெ .நாராயணன் தெரிவித்தார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் வாழ்க்கையில் வெற்றி பெற என்ற தலைப்பில் மனிதவள மேம்பாடு கலந்துரையாடல் பயிற்சி நடைபெற்றது.
பயற்சியில் நான்காம் வகுப்பு மாணவி அபிராமி அனைவரையும் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .கவிஞர் லயன் வி.பழனியப்பன் முன்னிலை வகித்தார்.உலகம்பட்டி                 லெ .நாராயணன் மனித வள மேம்பாடு குறித்து மாணவ,மாணவியர்க்கு பயற்சி அளித்து பேசுகையில்,ஏழு  விசயங்களை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளாக எடுத்துரைத்தார்.மனப்பான்மை,பழகும் தன்மை,பேச்சுக்கலை ,நேரப் பகிர்வு ,உற்சாகம் ,தன்னம்பிக்கை ஆகியவற்றை வாழ்க்கையில் செயல்படுத்துமாறு கேட்டுகொண்டார்.கோழி பண்ணையில் பண்ணையாள் உள்ளே நுழையும்போது நிறைய கோழிகள் சட்டென தலையை தூக்கும் .அனால் நோய்வாய் பட்ட கோழிகள் மட்டும் தலையை குனிந்து குறுக்கி கொள்ளும்.நீங்கள் வாழ்க்கையில் உற்சாகமாக இருந்து வெற்றி பெறுங்கள்.

உங்களுடைய பெயருக்கு பின்னால் (இ.ஆ.ப.,எம்.பி .பி .எஸ்.,இ .வ.ப .,)என ஏதாவது ஒரு அடைமொழியை வைத்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்."எறும்புகள் பேசுவதில்லை" என்றால் அவை சுறுசுறுப்பாக இயங்கும்.வரிசையாக செல்லும்.தன்னைவிட இரண்டு மடங்கு கனமுள்ள பொருள்களை கூட துக்கி செல்லும்.வரிசையாக செல்வதை களைத்து விட்டால் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வரிசையாக செல்ல ஆரம்பித்து விடும்.அவற்றை யாரும் மேற்பார்வையிடுவதில்லை.தங்கள் வேலையை தாங்களே செய்துமுடிக்கும்.அவற்றை போன்று நீங்களும் வாழ்க்கையில் சுறுசுறுப்புடன் இருந்து வெற்றிபெறுங்கள் என தனது வாழ்க்கை அனுபவத்தை அழகாக எடுத்துக் கூறி மாணவர்களை உற்சாகப்  படுத்தினார் .

பயிர்சியில் சொர்ணாம்பிகா,பரமேஸ்வரி,சன்முகப்ரகாஷ்,நடராஜன் ஆகிய மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில்களை பெற்றனர்.பயற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்திருந்தார்.மூன்றாம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.