Pages

Sunday, February 23, 2014

இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறது மங்கள்யான்: இஸ்ரோ

"செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட மங்கள்யான், தன்னுடைய இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது" என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

செயற்கோள் அடிப்படையிலான தகவல்களை, மீனவர்களுக்கு அளிப்பதற்காக புதுச்சேரி, தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் கிராம வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் தன்னுடைய இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. அதனுடைய செயல்பாடும் சிறப்பாக உள்ளது. இந்தாண்டு செப்டம்பர் 24ம் தேதி மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்திற்கு வெகு அருகில் செல்லும் என எதிர்பார்க்கிறோம். மங்கள்யான், செங்வாய் கிரகத்தை அடைந்ததும் விண்கலத்தின் வேகம் படிபடியாக குறைக்கப்பட்டு, சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதுதான், எங்களுடைய இலக்கு.

புதிய செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவது தொடர்பாக ஆயத்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பி.எஸ்.எல்.வி.,சி-24 செயற்கைகோள், மார்ச் மாதம் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும். இது, ஐ.ஆர்.ஆர்.,என்.எஸ்.,என்ற செயற்கைகோளை சுமந்து செல்ல உள்ளது. இதேபோல், இந்தியாவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.,மார்க்-3 மே அல்லது ஜூன் மாதத்தில் ஏவ, நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

விண்வெளியில் இந்தியர்களை கொண்டு செல்லுவதற்கான விண்கல மாடல் வடிமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.