Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 7, 2014

    பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி பிப்.9ல் சென்னையில் உண்ணாவிரதம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கிட வேண்டுதல், தொடக்ககல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேரடி நியமன முதுகலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து ஐம்பது சதவீத பணியிடங்களை பதவியுயர்வு மூலம் வழங்க வேண்டுதல், ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் வருகிற
    பிப்ரவரி ஒன்பதாம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவிருக்கும் இந்த உண்ணாவிரதத்தில் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க தமது பங்களிப்பை உறுதிசெய்வதன் மூலம் நமது பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ரத்து உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்நோக்கலாம்.

    அனைத்து மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை வெற்றிபெற செய்ய கடும் முயற்சி மேற்கொண்டு திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்ளவதை உறுதி செய்ய வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்

    இந்த       உண்ணாவிரத்திற்கு    அனைத்து    வகை   ஒப்பந்த ஆசிரியர்களையும் முதுகலை ஆசிரியர்களையும் இடைநிலை ஆசிரியர்களையும் சிறப்பாசிரியர்களையும் கலந்து கொள்ள வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது . 

    3 comments:

    uduman ali said...

    ALL CPS Teacher are parcipate this "unnaviratham"

    Anonymous said...

    pona atchiyila kaaka pidichingale appa inda ariv varalaya

    palanikmar nellai said...

    kelambitangapa ematha