Pages

Saturday, February 22, 2014

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்வு

தமிழக பிரிவைச் சேர்ந்த ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு:

தமிழக நில நிர்வாக ஆணையாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளர் ஆர்.கண்ணன், தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.கணேசன், மத்திய பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் அசோக் குமார் குப்தா, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் சி.பி.சிங், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் செயலாளர் சஷி சேகர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் நயன் சௌபே ஆகியோர் தலைமைச் செயலாளர் அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர் என்று ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்த இந்த ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இப்போது கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.