Pages

Monday, February 24, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பம்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்கள் மார்ச் 25-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தை ரூ.50 கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. பி.எட். படிப்பு முடித்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் இரண்டாம் தாள் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.
பார்வையற்றவர்களுக்கு மட்டுமே: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை பிற மாற்றுத் திறனாளிகளும் எழுதலாம் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால், இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டுமே எழுதும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாகவே இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. We are partially blind at the same time wehave finisshed B.Sc.,B.Ed.,(mathematics). may we apply to any chance to the special exam this time? please tell me ...

    ReplyDelete
  2. We are partially blind at the same time wehave finisshed B.Sc.,B.Ed.,(mathematics). may we apply to any chance to the special exam this time? please tell me ...

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.