Pages

Tuesday, February 25, 2014

"டி.இ.டி" தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.
முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.
இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 comments:

  1. Can anyone specify the date for cv?

    ReplyDelete
  2. Revathi 7373282849Tuesday, February 25, 2014

    What about 2012 tet case..?

    ReplyDelete
  3. ANDROID PHONE மூலம் பணம்
    சம்பாதிக்கஒரு APPLICATION.இன்
    றைய
    உலகில் அதிகமான மக்கள்பயன்படுத்
    துவது ஆண்ட்ராய்ட்
    போன்ஆகும் .இதில் பயன்படுத்த
    தேவையானஅப்ளிகேஷ
    ன்களை GOOGLE PLAY STORE
    இல்இலவசமாக தரவிறக்கலாம் .
    அப்படி உள்ளஅப்ளிகேஷனில்
    நமக்கு மாதம் மாதம் 150ரூபாய் தர
    ஒரு அப்ளிகேஷன்உள்ளத
    ு என்பது உங்களுக்கு தெரியுமா ?
    ஆம்அதுதான் MADLOCK.செயல்படும்
    முறை :நமது மொபைல்லை பயன்படு
    ருந்து விட்டு பின்
    எடுக்கும்போது அதன்LOCK ஐ
    எடுப்போம் .இது எல்லா ஆண்ட்ராய்ட்
    ல்ளிலும் உண்டு .
    அப்படி LOCKஎடுக்கும் போது உங்கள்
    மொபைல்திரையில்ஒரு விளம்பர படம்
    (IMAGE) இருக்கும் .இதை பார்க்க
    தான்உங்களுக்கு காசு தருகிறது இந்தந
    தினமும் பலமுறை நாம்லாக்எடுப்போ
    ம் .
    எதனால்நம்மை அறியாமலே பணம்ஏறு
    தனியாக எதுவும்
    செய்யதேவையில்லை .மிகவும் சின்ன
    அப்ளிகேஷன் .போன்
    நினைவு திறனை பாதிக்காது .நாம்
    விரும்பும் துறையில்இருந்து
    விளம்பரம் பெற வசதிகுறைந்த பட்சம்
    150 ரூபாய் வந்ததும்எடுத்து
    கொள்ளலாம் .நீங்கள்
    யாரையாவது REFER
    செய்தால்உங்களுக்கு தனி பணம்
    ஏறும் .நமது GPRS ஐ அதிகமாக
    பயன்படுத்தாது .குறை :குறைந்த
    பட்ச
    ரூபாய் 150 வந்த பின்தான்எடுக்கல
    ாம் .கண்டிப்பாக GPRS
    தேவைஇதை தரவிறக்க : (FOR
    DOWNLOAD )MAdLock
    APPLICATIONORMAdLock என PLAY
    STORE இல்
    தேடவும் .NOTE:தரவிறக்கி
    INSTALL
    செய்யும்போது REFERALCODE
    கேட்கும் இதை கொடுத்தால்மட்டு
    மே செயல் படும் Referral Code375HMB

    ReplyDelete
  4. TET 2013 CV COMPLETED CANDIDATES SHOULD BE GIVEN THE PREFERANCE.WII IT COME TRUE?

    ReplyDelete
  5. see jaya tv flash news

    ReplyDelete
  6. watch jayatv tet 82 marks cv starts in mar12

    ReplyDelete
  7. 90 above canditate pive prefrence

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.