மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இது குறித்து அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி வரும் வெள்ளிக்கிழமை (27-02-14) அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் 10% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டால் அது 100% மாக உயரும்.
ஜனவரி முதல் முன்தேதியிட்டு இந்த உயர்வு அமல் படுத்தப்படும். அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுவதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருமுன் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு என்பது வழக்கமான நடைமுறை என்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதற்கு பொருந்தாது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
Amma...tn govt employees and teacherskum 10% DA raise panni 50% DA va Basic Pay kooda merge panni GO pass pannuveengala....?
ReplyDeletehm.....pannnnuvanga....pannuvannga...
DeleteFirst Central announces.then you asking.
ReplyDelete