பள்ளி மாணவர்கள் வெற்றி பெற 10 அம்ச உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார். உழைப்பது நம் கடமை, தொழில் செய்வது நம் உரிமை. எனவே நல்ல முறையில் தொழில் செய்து நாட்டை வளப்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் ‘நான் விளக்காக இருப்பேன், படகாக இருப்பேன், ஏணியாக இருப்பேன்,
அடுத்தவர் துன்பத்தை துடைப்பேன், மனநிறைவுடன் வாழ்வேன்’ ஆகிய கொள்கைகளை மனதில் கொள்ள வேண்டும்.
10 அம்ச உறுதிமொழி
மாணவர்கள் உண்மைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாய் இருப்பது எப்படி? கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் வாழ்வது, மற்றவர்களை மதிப்பது, பாராட்டுவது எப்படி? பொறுமையாக செயல்பட்டு தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவது, பேச்சு திறனை வளர்த்து கொள்வது எப்படி? கூடி உழைத்து இலக்கை அடையும் விதம், திறனுடைய கடமையை பின்பற்றுவது, கோபத்தையும், சோம்பலையும் தவிர்ப்பது, சுயநலம் ஒழித்தல் ஆகிய 10 அம்ச உறுதிமொழியை ஏற்று வெற்றி காண வேண்டும்.
இவ்வாறு பேசிய அப்துல்கலாம் உறுதி மொழிகளை ஒவ்வொன்றாக கூற அதனை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment