Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, February 15, 2014

    பத்தாம் வகுப்பு பொது தேர்வு: 10.42 லட்சம் பேர் பங்கேற்பு

    மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வை, 10.42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பொது தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர் விவரங்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. தேர்வெழுதும் மாணவர் குறித்த, சரியான புள்ளி விவரம்,
    இம்மாதம், 17ம் தேதி தெரிய வரும். கடந்த ஆண்டு, 10.51 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த எண்ணிக்கையை விட, சில ஆயிரம், இந்த ஆண்டு குறையலாம் என, தெரிய வந்துள்ளது. இந்த குறைவுக்கு, 10ம் வகுப்பு வருவதற்குள், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர் காரணமாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒட்டுமொத்த தேர்ச்சி, 89 சதவீதமாக இருந்தது. மாணவர்களில், 86 சதவீதம் பேரும், மாணவியரில், 92 சதவீதம் பேரும், தேர்ச்சி பெற்றனர்.

    No comments: