ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் இரண்டு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. சேலம் மாவட்டம் அபிநவத்திலும், விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலையிலும் இப்பள்ளிகள் செயல்படுகின்றன.
இரண்டு பள்ளிகளிலும் 400 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 25 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இது வரை காலமுறை பணி ஆணை வழங்கப்படவில்லை. அந்த ஆணை நேற்று வழங்கப்பட்டது.
தமிழக பழங்குடியினரின் கல்வி வளர்ச்சிக்காக ஏகலைவா மாதிரி பள்ளிகளை கூடுதலாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.