அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 2 ம் ஆண்டு இ.சி.இ. பயிலும் மாணவர் பாலகிருஷ்ணவேல் ராஞ்சியில் ஜார்கண்ட் யோகா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 38 வது "தேசிய யோகா சாம்பியன்ஷிப் 2013" போட்டியில் கலந்து கொண்டார்.
இதில், தமிழகம் சார்பில் 65 பேர் பங்கேற்றனர். 17 முதல் 21 வயதினர்களுக்கிடையே நடந்த போட்டியில் பங்கேற்ற பாலகிருஷ்ணவேல் தேசிய அளவில் 5 ம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் இந்தியா சார்பில் ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
போட்டியில் 10 விதமான ஆசனங்கள், தனி நபர் நடன யோகா மற்றும் இரு நபர் நடன யோகா ஆகியவற்றை செய்து காட்டினார். மாணவரை கல்லூரி செயலர் சுந்தரமூர்த்தி, முதல்வர் சிவக்குமார், உடற் கல்வி இயக்குனர் அன்பழகன் மற்றும் நிர்வாக குழுவினர், பேராசிரியர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.