தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சி தென்னூர் கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாநிலத் தலைவர் ராஜராம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் இருதயராஜ், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பகுதி நேர தொகுப்பூதிய பணி காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிய பயன்களுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். இயல்பு நிலை தர ஊதியத்தை 5,400 ரூபாயாக கடந்த 1.1.2006ம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும்.
உயர்கல்வி ஊக்க ஊதியம் எம்.காம்.,க்கு ஒன்றும், அதற்கு மேல் பி.எட்., அல்லது எம்.எட்., அல்லது பி.ஹெச்டி.க்கு இரண்டாது ஊக்க ஊதியமும் வழங்க வேண்டும். வணிகவியல் பாடத்தில், இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த ஒரு தாளுக்கு 15 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.