Pages

Tuesday, January 21, 2014

பள்ளி வராமல் "டிமிக்கி' கொடுக்கும் தலைமையாசிரியரால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

பள்ளி வராமல் "டிமிக்கி' கொடுக்கும் தலைமையாசிரியரால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.சேந்தமங்கலம் அடுத்த, கொல்லிமலை யூனியன், பைல்நாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழ் செங்காட்டில் ஊராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 19 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளித் தலைமையாசிரியராக அருள்முருகன், உதவி ஆசிரியர் ஒருவரும் பணியயாற்றி வருகின்றனர். தலைமையாசிரியர் அருள்முருகன், அடிக்கடி பள்ளிக்கு வராமல் "டிமிக்கி' கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால், பள்ளி மாணவ, மாணவியரின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரே ஆசிரியர், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மலைவாழ் மக்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், சிறப்பு பயிற்சி, 14 வகை நலத்திட்டங்களை பெற்றுத்தருவது போன்ற காரணங்களுக்காக அவ்வப்போது, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு, தலைமையாசிரியர் சென்று வருவர். அதையே சாக்காக வைத்து, இப்பள்ளி தலைமையாசிரியர், வாரத்தில் சில நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் பள்ளிக்கே வருவது இல்லை, என்று கூறப்படுகிறது. அதனால், மாணவ, மாணவியரின் எதிர்காலம் குறித்து, பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பள்ளித் தலைமையாசிரியர் அருள்முருகன் கூறியதாவது:
கடந்த, பத்து நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து திரும்பிய நிலையில், விடுப்பு எடுத்திருந்தேன். நேற்று பள்ளிக்கு வரும் போது, பைக் பிரேக் டவுன் ஆனதால், பள்ளிக்கு வரமுடியவில்லை. மேலும், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் எடுப்பதற்காக கொல்லிமலை ஏ.இ.இ.ஓ., அலுவலகம் சென்று வரும் நிலை உள்ளது. பள்ளிக்கு வராமல் இருக்கிறேன் என்பது தவறான தகவல்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.