மதுரையில், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற பலர், கல்விச் சான்றிதழ்களில், ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்றிருந்ததால் அதிகாரிகள் நொந்து கொண்டனர்.
ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த சரிபார்ப்பு பணியில், 10 குழுக்கள் ஈடுபட்டன. முதற்கட்டமாக, தாள் 1ல் தேர்வான இடைநிலை ஆசிரியர்கள் 240 பேர் அழைக்கப்பட்டனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் டி.டிஎட்., (ஆசிரியர் பட்டய பயிற்சி) 'ஒரிஜினல்' சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சான்றிதழ் நகலில், அரசிதழில் பதிவுபெற்ற (கெஜட்டட்) அதிகாரியிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், பலர் தங்களது கல்விச் சான்றில், ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம் பெற்று வந்திருந்தனர்.
இதனால், 'யாரிடம் சான்றொப்பம் பெற வேண்டும் என்ற சாதாரண விஷயம் கூட தெரியவில்லையே,' என நொந்துகொண்ட அதிகாரிகள், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியர்களை அழைத்து, சான்றொப்பமிட ஏற்பாடு செய்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், "முதல் நாளில் 240 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், ஒருவர் வரவில்லை. பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டது.
23ம் தேதி முதல் டி.இ.டி., தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்," என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.