Pages

Saturday, January 25, 2014

மாணர்வகள் அம்மா,அப்பாவிடம் கூறி வாக்களிக்க சொல்லுங்கள் என தேவக்கோட்டை கோட்டாட்சியர் கணேசன் தெரிவித்தார்.



தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் கலந்துகொண்டோரை பள்ளியின் தலைமையாசிரியர்
லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை கோட்டாட்சியர் (ஆர் .டி.ஒ ) கணேசன் தலைமை தாங்கி பேசுகையில்,மாணவர்களாகிய 

நீங்கள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்க உள்ளீர்கள்.நீங்கள் பெரியவர்களான பிறகு  கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.அதற்க்காகத்தான் நமது அரசு தேசிய வாக்காளர் தினத்தை பள்ளிகளில் கொண்டாடுகிறது.நீங்கள் அனைவரும் உங்கள் அப்பா,அம்மாவிடம் சொல்லி கட்டாயம் வாக்களிக்க சொல்லுங்கள் என அறிவுரை வழங்கினார் .சிறப்பாக நடைபெறும் இப்பள்ளியில் படிக்கும் 6ம் வகுப்பு மாணவ,மாணவியர்க்கு ஆங்கில அகராதி அவர் வழங்குவதாகவும் தெரிவித்தார்.விழாவில் தேவகோட்டை வட்டாட்சியர் கயல்விழி,துணை -வட்டாட்சியர் தேர்தல் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு உத்தரவின்படி வாக்களிப்பது எனது உரிமை,எனது கடமை மற்றும் ஜனநாயகத்தின் முக்கியமான பங்கு வாக்காளர்களே என்கிற தலைப்புகளில் ரங்கோலி போட்டி,கட்டுரை போட்டி,ஓவிய போட்டி,பேச்சு போட்டிகள் நடைபெற்றன்.தேவகோட்டை கோட்டாட்சியர் கணேசன் மற்றும் தேவக்கோட்டை வட்டடாட்சியர் கயல்விழி ஆகியோர் ரங்கோலி போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளில் முதல்,இரண்டாம் பரிசுக்குரியவர்களை தேர்ந்து எடுத்தனர்.6-8 வகுப்பு பிரிவில் ரங்கோலி போட்டியில் முதல் பரிசை பவனாவும் ,கட்டுரை போட்டியில் முதல் பரிசை சொர்ணம்பிகாவும்,ஓவிய போட்டியில் முதல் பரிசை ராம்குமாரும்,பேச்சு போட்டியில் முதல் பரிசை நடராஜனும் வெற்றி பெற்றனர்.6-8 வகுப்பு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோட்டாட்சியர் கணேசனும்,3-5 வகுப்பு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்குளுக்கு வட்டாட்சியர் கயல்விழியும் ,1-2 வகுப்பு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்குளுக்கு துணை வட்டாட்சியர் ஜேம்சும் பரிசுகளை வழங்கினர்.

தேவக்கோட்டை கோட்டாட்சியர் கணேசன் தேர்தல் வாக்களர் உறுதிமொழி கூர அனைத்து மாணவ-மாணவியரும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .விழாவில் திரளான பெற்றோரும் கலந்துகொண்டனர்.நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.