Pages

Tuesday, January 21, 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் கணித பயிற்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி

Displaying DSCN3210.JPGகோணங்களை கணக்கிடுதல் தொடர்பான கணித பயிற்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.8ம் வகுப்பு மாணவர் வசந்தகுமார் வரவேற்றார் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.        


மதுரை வின்னர்ஸ் கேரியர் ஐ.ஏ .எஸ் .பயிற்சி மையத்தை சார்ந்த சங்கரன் தொடர் வரிசை,சதவீதம் கண்டறிதல் ,கோணங்களை கணக்கிடுதல், திசையினை அறிதல், தூரத்தை கணக்கிடுதல், லாபநட்டத்தை கணக்கிடுதல் , லாபநட்ட சதவீதத்தை கணக்கிடுதல் மற்றும் பொது அறிவு தொடர்பான தகவலகள் குறித்து பயற்சி அளித்ததுடன் மாணவ,மாணவியரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்திருந்தார்.                                                 

நிகழ்ச்சியின் நிறைவாக 8ம் வகுப்பு மாணவர் காளீஸ்வரன் நன்றி கூறினார் .     பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில்   மதுரை வின்னர்ஸ் கேரியர் ஐ.ஏ .எஸ் .பயிற்சி மையத்தை சார்ந்த சங்கரன்  கணித பயிற்சி   வழங்கியபோது       எடுத்த படம்                                           

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.