Pages

Wednesday, January 29, 2014

இளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி

இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள், தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த, இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி, தலைமைப் பண்பு பயிற்சி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள்,தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை மேம்படுத்த, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், இரண்டாவது கட்டமாக, இளம் தலைமையாசிரியர்களுக்கு, தலைமைப் பண்பு பயிற்சி, பிப்ரவரி, 3ம் தேதியில் இருந்து, 8ம் தேதிக்குள், மூன்று நாட்கள், அந்தந்த மாவட்டங்களில், நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், உயர் தொழில்நுட்ப முறையில், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் - மாணவர் உறவு, மாணவர்களின் திறனை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.