Pages

Wednesday, January 22, 2014

சிபிஎஸ்இ பள்ளியில் மாநில கல்வி திட்டத்திற்கு அனுமதி அரசின் மேல்முறையீடு ஐகோர்ட்டில் தள்ளுபடி

சிபிஎஸ்இ பள்ளிக்கு, மேல்நிலை கல்வியை மாநில கல்வி திட்டத்தில் நடத்த அனுமதி வழங்க தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவை எதிர்த்து கல்வித்துறை இயக்குனர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. சிவகாசி ஸ்ருதி வித்யோதயா பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 10 வகுப்புகள் நடைபெறுகின்றன.
இப்பள்ளியில் மாநில  அரசு பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு பள்ளி நிர்வாகி அரசுக்கு விண்ணப்பித்தார். அரசு அனுமதி மறுத் ததால் அவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அடிப்படை வசதிகள் இருந்தால் 11, 12ம்  வகுப்பை மாநில அரசு பாடத்திட்டத்தில் நடத்த அனுமதி வழங்கலாம்  என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு: பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத்திட்டத்திலும், 11, 12 வகுப்புகள் மற்றொரு பாடத்திட்டத்திலும் நடத்துகின்றனர். 

பணம் சம்பாதிக்க வேண் டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கையில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன என அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து  தமிழக அரசு 2001ல் ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மேல்நிலை கல்வியை தனியாக பிரித்து (11, 12) மற்றொரு பாடத்திட்டத்தில்  நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத் திட்டத்திலும், மேல் நிலையில் மற்றொரு பாடத்திட்டத்திட்டலும் படிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.  எனவே, பள்ளிக்கு மேல் நிலையில் மாநில அரசு பாடத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து  செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். Ôமாநில அரசு பாட திட்டத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக  தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே. அதில் தலையிட முடியாது.  அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறதுÕ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.