லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஏதுவாக, மாவட்டந்தோறும் கோயில் திருவிழா, முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடு குறித்த ஆலோசனைகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., க்களுக்கு, கமிஷன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஒவ்வொரு மாவட்டத்திலும், ஏற்கனவே உள்ளூர் விடுமுறை அளித்த நாட்கள், இனிமேல் விடுமுறை அளிக்க தகுதியான முக்கிய நிகழ்வு, அதற்கு அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு, எத்தனை பேர் கூடுவர் போன்றவை விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உள்ளூர் முக்கிய நிகழ்வுகளின் போது லோக்சபா தேர்தல் நடந்தால், பாதுகாப்பில் குளறுபடி ஏற்படும். உள்ளூர் விடுமுறை தினங்கள் தேவைப்படும் பட்சத்தில், அதற்கான காரணங்களை குறிப்பிட, கமிஷன் அறிவுறுத்தி உள்ளது' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.