Pages

Thursday, January 23, 2014

சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு : இணை இயக்குனர்

"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 6.6 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர்.
இதில், தாள்-1ல் 12,600 ; தாள்-2ல் 12 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றுகள் சரிபார்க்கப்படும். மாவட்டந்தோறும் ஜன.,20 முதல் 27 வரை இப்பணி நடக்கிறது. அனைவருக்கும் பணி கிடைக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.சிவகங்கையில், ஆய்வுக்கு வந்த, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் கூறுகையில், " ஆசிரியர் தேர்வு வாரிய வழி காட்டுதல் படி, சான்று சரிபார்த்தல் பணி நடக்கிறது. கல்வி தகுதிப்படி, "வெய்ட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்கி, இறுதி பட்டியல் தயாரித்து ஒப்படைக்கப்படும். 
பின்னர் இனசுழற்சி முறையில் பணி நியமன பட்டியல் வெளியாகும். சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்று, இறுதி பட்டியலில் இடம் பெற்ற 80 சதவீத ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.