"தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, இரண்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்.6ல், மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் , 27 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணிவழங்க வேண்டும், கம்ப்யூட்டர் இயக்குனர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் "டைப்பிஸ்ட்"களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, பிப். 6ல், மாநில அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதன் பிறகும் அரசு செவி சாய்க்கவில்லையெனில், பிப். 16ல், சென்னையில் நடக்கவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.