Pages

Thursday, January 16, 2014

33 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மூலம் தரம் உயர்வு! அரசு மாணவர்களும் மேம்பாடு பெற வாய்ப்பு

கிராமப்புற மாணவர்களின் ஆங்கில அறிவை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில், எதிர் வரும் கல்வி ஆண்டில், 33 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிமுகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்களில், ஒன்பது நகரவை பள்ளிகள் உட்பட, 160க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகிறது. தனியார் மெட்ரிக் பள்ளிகள், 133 உள்ளன. இப்பள்ளிகள் மூலம், பல ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ப்ளஸ் 2 தேர்வை எழுதி வெளியேறுகின்றனர். இவர்கள் தொழிற்கல்விக்கும், மருத்துவம் போன்ற உயர் கல்விக்கும் போட்டி தேர்வை எதிர் கொள்கின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எளிதில் மேற்கொள்ளவும், ஆங்கில அறிவை பெறவும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் பெற்று விடுகின்றனர்.
ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இது சவாலாகிறது. இவற்றை சமாளிக்கும்படி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை போதிப்பதன் மூலம், சிறந்து விளங்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியை அரசு அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 2012-13ல், 5 பள்ளிகளில் ஆங்கில போதனை முறை இருந்தது. நடப்பு, 2013-14 ஆண்டு, 55 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல நூறு மாணவர்கள் பயன்பெற்று, வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வாய்ப்பு உருவாகிறது.
தவிர, வரும், 2014-15ம் கல்வி ஆண்டில் மேலும், 33 பள்ளிகளிலும் கூடுதலாக ஆங்கில வழிக்கல்வியை அறிமுகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில், தற்போது ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் வழிக்கல்வி தனியாக இருந்தாலும், அத்துடன், ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை ஆங்கில வழிக்கல்வி, தனிப்பிரிவாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஈரோடு மற்றும் சுற்றுப்பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இ ருந்தாலும், அரசு பெண்கள் மே ல்நிலைப் பள்ளியில், ஆங்கில வழிக்கல்வி தரமானதாக இருப்பதால், இந்த பிரிவில் சேர்க்க கடும் போட்டி நிலவுகிறது.
தனியார் பள்ளி அளவுக்கு, இப்பள்ளி ஆங்கில வழிக்கல்வி மாணவிகள், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெறுகின்றனர். இதனால், தனியார் பள்ளிகளில் இருந்தும்கூட, அட்மிஷன் கேட்டு, இப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள், அதிகரித்து வருகின்றனர். இந்த ஆண்டு கிராமப்புற மாணவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில், கிராமப்புற அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியை அறிவித்துள்ளது, பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.