Pages

Friday, January 17, 2014

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் 21ல் தீர்ப்பு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை சட்டப்படியான அளவீட்டில் வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் 21ம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளது.தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 129 ஆசிரியர்களில் 74 ஆயிரத்து 200 பேர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 மற்றும் ரூ.4,200 என்ற அளவீட்டில் ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இதில் இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை 1.6.2006ம் தேதி முதல் மாற்றி அமைக்க வேண்டும், அரசுக்கு தவறான தகவல் தந்ததற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. வழக்கு தொடர்பாக  கடைசி கட்ட விசாரணை கடந்த 7ம் தேதி நடந்தது. இதில் வரும் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.