கல்லூரி முதல்வர்களின் பதவி காலத்தை அதிகபட்சம் 5இலிருந்து 10 வருடங்கள் வரை நீட்டிக்க யு.ஜி.சி. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தனது முந்தைய விதியில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
தொடர்புடைய வட்டாரங்கள் கூறுவதாவது: 2010ம் ஆண்டிலிருந்து கல்லூரி முதல்வர்களாக நியமிக்கப்படுபவர்கள், அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை மட்டுமே அப்பதவியை வகிக்க முடியும் என்ற விதியை UGC கொண்டு வந்தது. ஆனால், அதனை மாற்றி, 10 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, தற்போது 10 ஆண்டுகளாக நீட்டிக்கும் வகையில், முந்தைய விதிமுறையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
இதன்படி, சாத்தியமுள்ள இடங்களில், ஒருவர் கல்லூரி முதல்வர் பதவியை அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை வகிக்கலாம். UGC -ஆல் நியமிக்கப்பட்ட குழு, மேற்கண்ட பரிந்துரையை அளித்தது. இதன்மூலம், ஆற்றல் வாய்ந்த இளம் நபர்களை அப்பதவியில் அமர்த்த முடியும் என்று அக்குழு பரிந்துரைத்தது.
தற்போதைய விதிப்படி, பல இடங்களில், கல்லூரி முதல்வர் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நியமிக்கப்படுகிறார் மற்றும் தேவைப்பட்டால், மற்றுமொரு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்கிறார்கள்.
அதேசமயம், இந்த 10 ஆண்டுகள் நீட்டிப்பு என்ற விதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயமல்ல. முதல்வர் பதவி 5 ஆண்டுகள் மட்டுமே என்ற விதி பின்பற்றப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த புதிய கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.