Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, September 30, 2013

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு

    இவ்வழக்கு திங்கள்கிழமை 30தேதி காலையிலேயே 10வது வழக்காக விசாரணை செய்யப்பட்டது. இன்றைய வழக்கின்போது அட்வகட் ஜெனரல் ஆஜராகி மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 வினாக்களுக்கும் 40 மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்குவது அல்லது 110 வினாக்களுக்கு பெற்ற மதிப்பெண்களை 150 க்கு கணக்கிடுவது என்று 3 வகையான மதிப்பிட்டு முறைகளை பரிசீலிக்கும்படி வாதிட்டார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு

    கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுக்குறித்து, இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

    வகுப்பறை கட்டுமான பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப்பு, தலைமையாசிரியர்களுக்கு நிம்மதி

    புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு

    புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு,தலைமை ஆசிரியர்,ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள,"கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.குடியிருப்பு பகுதிகளில்,மக்கள் தொகை 300 பேருக்கு,ஒரு தொடக்க பள்ளி அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில்,மாநிலம் முழுவதும் கடந்தாண்டு,கள ஆய்வு செய்தனர்.

    அரசு ஊழியர்களுக்கு 30-ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கம் போல, வரும் 30-ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு

    போதிய தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வு,தேர்வு புறக்கணிப்பு, பணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில், கடந்த 2003-04 கல்வி ஆண்டில் டி.ஆர்.பி., மூலம், தொகுப்பூதிய அடிப்படையில், பட்டதாரி 5,377 முதுநிலை பட்டதாரி 1,498 உட்பட இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

    தமிழகத்தில் 1.6.2006 ஆம் ஆண்டுக்கு முன் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும் என, முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

    பணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்கணிப்போம்

    ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்குரிய படி வழங்கப்படாததால் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு

    தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ஆட்சி மாறியும் சம்பளம் உயரவில்லை, ஆர்.எம்.எஸ்.ஏ பணியாளர்கள் கவலை

    Sunday, September 29, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

    தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-Iஐ, கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர்.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி 7 அம்ச கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக இயக்குநர் உறுதி

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்வி துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி அதில் 7 அம்ச கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் கடந்த 4 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக அடிப்படையில் தெரிவித்தனர்.

    செவ்வாய் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு தண்ணீர் கிடைக்கும்

    செவ்வாய் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு தண்ணீர் கிடைக்கும்செவ்வாயின் மண்ணில் வியப்பூட்டும் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது என்று கியூரியாஸிட்டி ரோபோ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஓரளவுக்கு நாசா விஞ்ஞானிகளுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாகும்.

    ஆதரவற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள்

    ஓமலூர் பகுதியில் பொருளாதார ரீதியாக ஆதரவற்ற நிலையில் காணப்படும் மாணவ-மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்மாதிரி முயற்சியை தொடங்கியுள்ளனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

    மத்தியப் பிரதேசம், அசாம், ராஜஸ்தான் மாநில அரசுகள், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90%சதவீதமாக உயர்த்தியது.

    கேள்வித்தாள், ‘லீக்’ சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம்

    டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - 54 புதிய தொடக்கப்பள்ளிகள் அமைத்தல் மற்றும் 54 தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்து தமிழக அரசு உத்தரவு

    டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி

    கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறிநிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையானது

    GO.190 Higher Education Dept Dt.27.09.2013 – Equivalence of Degree – M.Sc. Statistics awarded by University of Madras as equivalent to M.Sc. Mathematics – Recommendation of Equivalence Committee – Orders – Issued.

    "எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது" என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

    கல்வி உதவித்தொகை கிடைக்காமல் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு

    மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயதை, 62ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை, என்று, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்க உத்தரவு

    தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு வினோத இடமாறுதல் உத்தரவு

    அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வினோதமான முறையில், இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.

    தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் டிஇடி தேர்வு கட்டாயம்-மெட்ரிக் இயக்ககம் அறிவிப்பு

    பள்ளிக்கூடம் திறந்தாலும் போராட்டம் தொடரும்

    அடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

    அடிப்படை அறிவியல் குறித்து, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளிக்க, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது.

    Friday, September 27, 2013

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் மறியல் போராட்டம்

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் மறியல் போராட்டம் 25.09.2013 முதல் தலைநகரில் நடைபெற்று வருகிறது...முதல்நாள் 5000 பேர் கைது, 2ஆம் நாள் 2000மகளிர் உட்பட 5000பேர் கைது, 3ஆம் நாள் 5000பேர் கைது என மறியல் போர் தொடர்ந்து நடந்தாலும் ஆளும் அரசு அதைப்பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை..

    தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும் திட்டம் - 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடநூல்கள் பள்ளிகளுக்கு 20.09.2013 விநியோகம் செய்து அறிக்கை அனுப்ப உத்தரவு

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக சென்னையில் நடைபெறும் மூன்றாவது நாள் மறியல் காட்சிகள்

    IMG_20130927_103033.jpg

    2014 - 2015ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, இயக்குநர் தகவல்

    காலாண்டு விடுமுறையில் அலுவலக பணி அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

    காலாண்டு தேர்வு விடுமுறையில், தொடர்ந்து ஆன்லைன் அலுவலக பணி, ஆசிரியர்களுக்கு திணிக்கப்படுவதால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் முதல் பருவத்தேர்வு முடிவடைந்து, அக்டோபர், 2ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில், பவர் ஃபைனான்ஸ் தொடர்பான ஆன்லைன் பணிகளை மேற்கொள்ளும்படி, உத்தரவிடப்பட்டுள்ளனர்.

    முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படுமா? 30-ந் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150-ல் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    டி.ஆர்.பி., தலைவரை சஸ்பெண்ட் செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    தமிழை அலட்சியப்படுத்தியதற்காக, டி.ஆர்.பி., தலைவரை, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விடுத்து உள்ளது. சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கை: முதுகலை தமிழாசிரியர் தேர்வில், 47 கேள்விகள், தவறாகவும், பிழையாகவும் அச்சிடப்பட்டுள்ளன.

    வாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட நேரம் தவறாமல் பள்ளி மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்று விட வேண்டும்

    தூத்துக்குடி தொகுதியில் அடுத்த மாதம் நேரம் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று மக்கள் கேட்கும் படிவங்களை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அங்கு செல்லாமல் இருந்து விடக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு நடந்த பயிற்சியில் வாக்குப்பதிவு அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான மதுமதி தெரிவித்தார்.

    44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில்ஆரம்பம்

    மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.கல்வி தரத்தை மேம்படுத்தவும்,மாணவர்களிடையே, நல்ல குணங்களை ஏற்படுத்தவும், கல்வித்துறை, முடிந்த அளவிற்கு, பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

    குரூப்-1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்அறிவிப்பு

    தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,391 பேர்கள் கலந்து கொள்ளும் குரூப்&1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

    Thursday, September 26, 2013

    வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

    வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

    இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு வந்தது. போதிய நேரமின்மை காரணமாக இரு தரப்பும் செய்துகொண்ட சமரசத்தை அடுத்து நீதிபதிகள் வருகிற அக்டோபர் மாதம் 7ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    செப்டம்பர் / அக்டோபர் 2013 - மேல்நிலை / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் தேர்வு மையங்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதியம் மற்றும் சில்லறை செலவினங்கள் அந்தந்த தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களின் வங்கி கணக்கில் ECS மூலம் பணம் சேரும் வகையில் பட்டியல் தயார் செய்து அனுப்ப உத்தரவு

    தொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின் கீழ் நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வழங்க, பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம் 4550 ஆசிரியர்கள் பங்கேற்பு

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 5 நாள்கள் தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்துகிறது. இன்று  இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம்  ஆசிரியைகளின் முன்னெடுப்பில் வெற்றிகரமாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் புறப்பட்டு கோட்டை நோக்கி சென்று சாலைமறியலில் 4550 ஆசிரியர் ஆசிரியைகள் கலந்துகொண்டு சிறை செல்லும் செயல் வீரர்களாக, கோரிக்கைகளை வென்றெடுக்க துணிந்து நிற்கும் கேடயமாக கைதாகினர்.

    7-வது சம்பள கமிஷனில் எதிர்பார்க்கப்படும் ஊதியம் மற்றும் முதல் சம்பள கமிஷன் முதல் 6 ஆவது சம்பள கமிஷன் வரை ஓர் ஒப்பீடு

    துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்: (இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்)

    இடைநிலை ஆசிரியர்கள்

    1. 004 - Deputy Inspectors Test-First Paper
    (Relating to Secondary and Special Schools) (without
    books)
    2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
    (Relating to Elementary Schools) (Without Books)
    3. 119 - Deputy Inspector’s Test
    Educational Statistics (With Books).
    4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
    (or)
    114 The Account Test for Executive Officers (With Books).
    5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
    (Previously the District Office Manual--Two Parts) (With
    Books).

    பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

    காலாண்டு தேர்வுவிடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

    பிப்.,16ல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு

    மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET)-2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக சிடிஇடி தேர்வு நடத்தப்படுகின்றது.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு கிடையாது - ஆசிரியர் தேர்வு வாரியம்

    ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

    முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு

    இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு - Dinamani

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள். இந்த ஊதியக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து இதன் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றில் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

    அண்ணாமலை பல்கலை. அரசு பல்கலை.யாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி

    தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் : அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதோடு, 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர் களுக்கும் ஓய்வூதியம் வழங் குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவு

    தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 50 நடுநிலைப் பள்ளிகள் சமீபத்தில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

    பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2015-2016-ல் அமல்படுத்த வாய்ப்பு

    பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. இந்த பாடத்திட்டம் 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது.புதிய பாடத்திட்டம் தமிழக அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

    மாணவர்களுக்கான கேரம் போட்டி பங்கேற்க பள்ளிகளுக்கு அழைப்பு

    ஒன்று முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு

    கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களின் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ளது.

    Wednesday, September 25, 2013

    அகஇ - ஒவ்வொரு மாவட்டத்ததிலும் அனுமதிக்கப்பட்ட BRTE மற்றும் CRTEs விவரங்கள் வருடவாரியாக நாளை கலை 10.30க்குள் அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் குறு வள மைய அளவில் நியமிக்கப்பட்ட ஆசிரிய பயிற்றுநர்கள், அனுமதிக்கப்பட்ட

    தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

    சேப்பாக்கத்தில் ஆசிரியர்கள் மறியல்: 3 ஆயிரம் பேர் கைது

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட ஆயிரக்கணக்கான ஆசிரியர்–ஆசிரியைகள் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அவர்கள் திரண்டனர். 

    ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது: தமிழக அரசு

    ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு ஊழியர்களுக்குகான 10% அகவிலைப்படிக்கான மைய அரசு ஆணை வெளியீட்டு உத்தரவு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு, 01.01.2016 முதல் அமுலுக்கு வருகிறது

    மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் மன்மோகன்சிங் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள கமிஷன் 2016-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 7வது ஊதியக் குழுவில் இடம் பெற உள்ள வல்லுனர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிப்பு

    7-வது சம்பள கமிஷனை இன்று பிரதமர் அறிவித்தார். இந்த வகையில், நாட்டில், முதல்முறையாக ராணுவத்திற்கு என தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆய்வுகருத்துகள்

    பத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர் ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்கிவிடும். கண்ணில் விளக்கெண்ணை யை ஊற்றிக் கொண்டு 24 மணிநேரமும் படிக்க வேண்டும் என பார்ப்பவரெல்லாம் வெறுப்பேற்றும் அளவுக்கு அட்வைஸ் சொல்வார்கள்.

    தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்படும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை

    மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை விட தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு சுமார் 9 ஆயிரம்ரூபாய் வரை குறைவாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக இடைநிலை ஆசிரியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின் மறியல் காட்சிகள்

    புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி நவ.17ல் மாநாடு

    வழக்கு விசாரணை இன்றும் தொடர்கின்றது முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் பாடத்துக்கு மறுதேர்வு நடக்குமா?

    வழக்கு விசாரணை இன்றும் (25ந் தேதி) தொடர்கின்றது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது.

    தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த இயலாது: உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

    எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது.

    அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS&PROJECTS" என்ற தலைப்பில் 05.10.2013 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 12.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

    முடங்குகிறதா டி.என்.பி.எஸ்.சி., அரசு வேலை இனி இல்லை?

    பள்ளியில் உள்ள பழைய கட்டிடங்கள் இடித்து தள்ள உத்தரவு

    Tuesday, September 24, 2013

    சிற்பிகளின் வருங்கால அவலநிலை


    அறிவியல் கண்டுபிடிப்பிற்கு தங்கப்பதக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பழநியை சேர்ந்த மாணவர்கள் இருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

    முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வா?

    முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வா இல்லை அரசுடன் ஆலோசித்து எந்த மாதிரியான முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியம் உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப் போகிறது என முதுகலை ஆசிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    குழந்தை பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையில்...

    குழந்தைப் பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையேயான ஒரு பருவம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ட்வீன் என்று அழைப்பர். 11 வயது முதல் 13 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இதற்குள் அடக்கம்.

    தொலைநிலைக் கல்வி மேற்கொள்ள விரும்புவோர் கவனிக்க...

    கல்வி உலகில், தொலைநிலை முறையிலான கல்வி என்பது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. சரியான பாடம் மற்றும் பல்கலையைத் தேர்வு செய்வதே, தொலைநிலைக் கல்வியில் முக்கியமான அம்சம்.

    பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்கியது

    பிளஸ் 2 தனித் தேர்வுகள், மாநிலம் முழுவதும், 114 மையங்களில் துவங்கின. நேற்று, மொழி முதல்தாள் தேர்வு நடந்தது. தொடர்ந்து, வரும், 2ம் தேதி வரை நடக்கும் தேர்வை, 42 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, மாநிலம் முழுவதும், 124 மையங்களில் துவங்கின.

    தமிழகம் முழுவதும் பரவும் பார்வையற்றோர் போராட்டம்: முடிவுக்கு வருவது எப்போது?

    ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாணவர்கள், சென்னையில் நடத்தி வரும் போராட்டம், ஏழாவது நாளை தாண்டியும், நடந்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டி -ருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம், ஐகோர்ட்டு உத்தரவு

    Photo

    "ஆதார் அட்டை" கட்டாயமில்லை

    Photo

    நெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    குளறுபடி, பணிச்சுமை குறைய வாய்ப்பு பிளஸ்2 துணைத் தேர்வில் புதிய முறை

    Photo

    மகாரா ஷ்டிரவிற்கு கல்வி சுற்றுலா: மாநகராட்சி மாணவர்கள் 50 பேர் தேர்வு

    கோட்டை நோக்கி ஆசிரியர்கள் கோரிக்கை பேரணி

    Photo: கோட்டை நோக்கி ஆசிரியர்கள் கோரிக்கை பேரணி 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச்சேர்ந்த ஆசிரியர்கள் இன்று காலையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி சென்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் 5200 என்பதை மாற்றி 9300 என வழங்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை, சூப்பர் நிலைக்குரிய தனி ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை கோஷம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று காலையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணி சென்றனர்.

    ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் 5200 என்பதை மாற்றி 9300 என வழங்கிட வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை, சூப்பர் நிலைக்குரிய தனி ஊதிய விகிதம் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை கோஷம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

    தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில் ஆசி­ரியர் பற்­றாக்­குறை: மாண­வர்கள் தவிப்பு

    அரசு தொழிற்­ப­யிற்சி பள்­ளி­ களில், ஏரா­ள­மான ஆசி­ரியர் பணி­யி­டங்கள் காலி­யாக உள்­ளதால், மாண­வர்­களின் தொழிற்­ப­யிற்சி திறன் கேள்வி குறி­யாகி உள்­ளது.

    Monday, September 23, 2013

    தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்" என்ற தலைப்பில் கருத்தாளர்கள் பயிற்சி.

    2013-2014 ஆம் கல்வியாண்டு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்'என்ற தலைப்பில் பயிற்சியினை வழங்கிட மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி:

    தொடக்கநிலை முதன்மைக் கருத்தாளர் பயிற்சி-25.09.2013

    பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு - 50 நடுநிலை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்துதல் - ஆணை வெளியீட்டு அரசு உத்தரவு

    மாணவர்களின் சமூக அக்கறை: சரியும் ரூபாய் மதிப்பை அதிகரிக்க பேரணி

    "சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரிக்க வேண்டும்" என்ற சமுதாய அக்கறையோடு, திருச்சி என்.ஐ.டி., மாணவ, மாணவிகள் நடத்திய பேரணி, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொட்டியம் வட்டாரக் கிளையின் சார்பில் செப் 25ல் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் 100 ஆசிரியர்கள் கலந்துகொள்ள முடிவு

    ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு தள்ளுபடி

    ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.: அரசுப் பள்ளிகளில் நடைமுறைக்கு வருமா?

    தனியார் பள்ளி கல்லூரிகளில், மாணவர் பற்றிய முழு விபரங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க, உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடைமுறையை அரசுப் பள்ளிகளிலும் பின்பற்றினால், தேர்ச்சி சதவீதம் உயர வாய்ப்பு ஏற்படும்.

    பொது வருங்கால வைப்பு நிதி விதிகள் - பாகம்1

    சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

    கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது.

    நினைவாற்றலைத் தூண்டும் தோப்புக்கரணம்

    இந்துக்களின் ஒவ்வொரு வழிபாட்டு முறையும், விரதங்களும் கூட அறிவியல் தொடர்புடைய உடலின் ஆரோக்கியத்துக்கு உதவும் வகையில் அமைந்துள்ளன. இதற்கு ஒரு உதாரணம்தான் தோப்புக்கரணம்.

    நீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

    குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

    பொதுத்தேர்வு கட்டண வசூலில் முறைகேடு - Dinamalar

    பொதுத்தேர்விற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

    விண்ணபிக்க கால அவகாசம் உள்ள சில வேலைவாய்ப்புகளின் சுருக்கமான கால அட்டவணை

    கவுரவ ஆசிரியர்களுக்கு கிடைத்தது சம்பளம்

    "அரசுக் கல்லூரிகளில் 2வது "ஷிப்ட்" கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்து, சம்பளம் வழங்க" உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    Sunday, September 22, 2013

    கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணி: ஆசிரியர் கூட்டணி முடிவு

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(திங்கள்கிழமை) எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணி நடத்த தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர்.

    ஆசிரியர் பணிநிரவல் தமிழக அரசு உத்தரவு

    ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும்.

    பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்

    பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பஞ்., யூனியன் துவக்கப் பள்ளிகளுக்கு 8 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய், தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    தரம் உயர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் (19 மாவட்டங்கள்)

    1)தூத்துக்குடி மாவட்டம் -2 SCHOOLS 

    PUMS -பொட்டல் காடு 

    PUMS -பன்னம் பாறை 

    2)நெல்லை  மாவட்டம்-2-SCHOOLS  

    PUMS பலபுதிர ராமபுரம் 

    PUMS-வென்றிலிங்கபுரம்  

    3)கோவை மாவட்டம் -2 SCHOOLS 

    PUMS-மயிலேறி பாளையம்

    PUMS-சுகுனாபுரம் -பேரூர்  ஒன்றியம்


    4)திருச்சி -மாவட்டம் -3 SCHOOLS 

    PUMS -போசம் பட்டி -அந்தநல்லூர் ஒன்றியம்

    PUMS -கரும்புளிபட்டி -மணப்பாறை ஒன்றியம்

    PUMS -கரிகாலி -முசிறி  ஒன்றியம்

    ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

    சென்னை, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் தலைவர் அன்பரசு, நிருபர்களிடம் கூறியதாவது:

    யார் தலைமை ஆசிரியர்; இயக்கங்களிடையே போட்டி: சம்பள உயர்வுக்கு போராடுவதில் சிக்கல்

    யார் தலைமையில் செயல்படுவது என, ஆசிரியர் இயக்கங்களிடையே, போட்டா போட்டி நிலவுவதால், ஊதிய உயர்வு கேட்டு, தமிழக அரசுக்கு எதிராக போராடுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 28,593 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், 85,324 ஆசிரியர்களும், 9,259 நடுநிலைப் பள்ளிகளில், 66,056 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.

    ஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு? பல லட்சம் கையாடல்

    சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் ஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கங்களில், பல லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

    கேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம்: டி.ஆர்.பி., முடிவு

    முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

    பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தேர்தல் பணிக்கு ஒதுக்கீடு மும்முரம்

    2014 நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடுத்த, பள்ளி வாரியாக ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய, விண்ணப்பங்களை பெரும் பணி தீவிரமாக நடக்கிறது.

    Saturday, September 21, 2013

    50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

    தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சரால் 15.5.2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும்,

    தொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால், அதை தவிர்க்க கைபேசியை அணைத்து வைக்க இயக்குநர் உத்தரவு

    தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்

    SSLC / PLUS 2 HALLTICKET ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்கள் நாளை விண்ணப்பத்தினை சமர்பித்த DEO அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ள உத்தரவு

    மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண "மொபைல் கவுன்சிலிங்"

    மதுரை உட்பட 4 மாவட்டங்களில், மாணவர்களுக்கு "கவுன்சிலிங்" அளிப்பதற்கான வேன், நேற்று மதுரை வந்தது.

    செயல்படாத மாற்றுத் திறனாளிகள் துறை: கமிஷனரை மாற்ற கோரிக்கை

    "கடந்த ஓராண்டாக, மாற்றுத்திறனாளி நலத்துறையில் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. இதனால், மாணவர்கள் வேதனை அடைவதுடன், மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இத்திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ள, கமிஷனர் ஜெயக்கொடியை "சஸ்பெண்ட்" செய்ய வேண்டும்," என, பார்வையற்ற பட்டதாரி மற்றும் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் கூறினார்.

    சாக்கடை கழிவுநீர் தேக்கம், சுத்தமில்லாத கழிப்பறை: கேள்விக்குறியாகும் அரசுப் பள்ளிகளின் சுகாதாரம்

    அரசு பள்ளிகளையொட்டி கழிவு நீர் தேக்கம், துப்புரவு தொழிலாளர் பணியிடம் நிரப்பப்படாததால், கழிப்பறைகள், கொசு உற்பத்தி மையமாக மாறி, மாணவர்களின் சுகாதாரத்திற்கு உலைவைக்கிறது. மர்ம காய்ச்சல் துவங்கும் முன், கல்வித்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவே பெற்றோர்களின், எதிர்பார்ப்பாக உள்ளது.

    புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

    புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார் .பாராளாமன்றதில் புதிய பென்ஷன் மசோதா கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு

    பகுதி நேர ஆசிரியர்களை, "காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிக்கு வரவேண்டாம்,' என்ற வாய்மொழி உத்தரவால், செப்டம்பரில் 25 சதவீதம் சம்பளம் "கட்'டாகும், என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    அடுத்தாண்டு ஏப்ரல் முதல் தொழில் வரி 30% உயர்வு

    Photo

    50 சதவீதம் அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?

    5 ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப் படி 50 சதவீதத்தை தாண்டும் போது, 50 சதவீத அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப் பட வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் 6 ஆவது ஊதியக் குழுவில் அகவிலைப் படி 100 சதவீதத்தை தாண்டும் போது 25 சதவீதப் படிகள் உயர்த்தப் பட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    Friday, September 20, 2013

    இரட்டைப்பட்ட வழக்கு, மீண்டும் வருகிற வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது

    தொடரும் இரட்டைப்பட்ட வழக்கு இன்று நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்ட வழக்கு, இரட்டைப்பட்ட வழக்கின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் அவர்கள் வாதிட்டார். அவரது வாதம் காலை 11.55க்கு தொடங்கி பிற்பகல் 1.15வரை தொடர்ந்தது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவு

    தேர்வுத் துறை இயக்குனராக, தேவராஜன் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத் தேர்வுக்குப் பின், தேர்வு விவரங்களிலும், பெயர்களிலும் பிழைகள் இருப்பதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மாணவர், தேர்வுத் துறைக்கு வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில், தேர்வுத் துறை இயக்குனர், புதிய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    தவிப்பில் ஆசிரியர்கள்: மனது வைப்பாரா செயலர்

    தமிழகத்தில், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட பள்ளிகளில், 2002ம் ஆண்டுமுதல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்டனர்.

    திருச்சி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அதன் மாநில போராட்டக் குழு உறுப்பினர் நீலகண்டன் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்களின் தொகுப்பு





    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். இந்நிலையில் தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி இனி 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்: 30ம் தேதிக்குள் வெளியீடு?

    முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

    ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னை தீர்ந்தது

    தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 3,565 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1,581 பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடங்களை, வரும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. "தினமலர்" நாளிதழ் செய்தி எதிரொலியாக, 5,146 ஆசிரியர்களும், எந்த சிக்கலும் இன்றி, சம்பளம் பெறுவது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் முறைகேடு? தேர்வுத்துறை மீண்டும் ஆய்வு

    கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின் நடந்த மறு மதிப்பீட்டு விடைத்தாள்கள் அனைத்தையும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு மூலம், மீண்டும், தேர்வுத்துறை ஆய்வு நடத்தி வருகிறது.

    தேர்வு விடைத்தாள் வடிவமைப்பு மாற்றம்: தனி தேர்வுகளில் அமல்

    பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில், புதிய விடைத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செப்., 23 முதல் நடக்கும் தனி தேர்வுகளில், மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில், இவற்றை தேர்வுத்துறை வழங்குகிறது.

    இரட்டைப் பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது

    இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வில், வழக்குகள் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.36ல் உள்ளதால் இன்று மாலைக்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி?

    ஆதிதிராவிட மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க, கொண்டு வரப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த, நடப்பு ஆண்டுக்கு, 813 கோடி ரூபாய் தேவைப்படுவதால், திட்டத்தை, நடைமுறைப்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    Thursday, September 19, 2013

    தகுதி பெறாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    அண்மையில் நீதிமன்ற உத்தரவின்படி 652 கணினி ஆசிரியர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட நிதிகுறைப்புக்கு எதிர்ப்பு

    அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு பாதியாக குறைத்திருப்பதாக வெளியான செய்திக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 1 தேர்வின் முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 27, 28, 29 தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வு, அக்டோபர் 25, 26, மற்றும் 27ஆம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரட்டைப்பட்டம் வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை

    இன்றைய வழக்கு பட்டியலில் வரிசை எண்.34ல் பட்டியலிடப்பட்டது. நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு இன்று மாலைக்குள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய மதியம் 3மணிவரை வழக்கு பட்டியல் வரிசை எண்.26 உடன் முடித்து சில அலுவல் காரணமாக தலைமை நீதிபதி சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முதன்முதலாக இணையம்மூலம் தேர்வுக்கூடநுழைவுச்சீட்டு

    அரசுத் தேர்வுத் துறையில், முதன்முதலாக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் இணையதளம் மூலமாக தேர்வர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அக்டோபர் மாதம் 3ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று மாணவர்கள் அனைவருக்கும் 2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

    பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

    போலீஸ் கண்காணிப்பில் ஆசிரியர்கள்

    மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் களுக்கு இணையாக மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.

    வினாத்தாள் பிழையால் தமிழாசிரியர் நியமனத்திற்கு மறுத்தேர்வா, ஐகோர்ட்டு உத்தரவு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு, நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

    பிளஸ் 1 காலாண்டு தேர்வு ஆங்கில மீடியம் வினாத்தாளில் குழப்பம்

    அரசு பாடத்திட்ட அடிப்டையில் தயாரித்த 2 புத்தகங்களை அனுப்பி வைக்க உத்தரவு

    அரசு பாடத்திட்ட அடிப்டையில் தயாரித்த 2 புத்தகங்களை அனுப்பி வைக்கவேண்டும், பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை: சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு

    பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.இதன்படி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அரசு கருத்தரங்கங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் விமானங்களில் சிக்கன வகுப்பில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

    முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பேசும் திட்டம் துவக்கம்

    பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று முன்தினம் துவங்கியது. துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாதத்திற்கு ஓரிரு முறை, முதன்மைக் கல்வி அலுவலர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம்.

    Wednesday, September 18, 2013

    EDUCATION - INCENTIVE INCREMENT FOR TEACHERS DURING 1968-69

    முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து செய்ய கூடாது? ஐகோர்ட் கேள்வி!

    முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஐகோர்ட்டில் இன்று விளக்கம் அளித்தார்.அதில் ஏன் தேர்வினை ரத்து செய்ய கூடாது என நீதிபதி கேட்ட கேள்விக்கு 40 பிழையான கேள்விகளை தவிர்த்து மற்ற  வினாக்களை மதிப்பிடலாம்

    இரட்டைப்பட்டம் வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது, விரைவில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

    இன்று மாலை 4.05 மணிக்கு நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணை  தொடங்கியது. முதலில் இரட்டை பட்டம் சார்பில் வழக்குரைஞர் பிரகாஸ் மற்றும் பிற வழக்குரைஞர்கள் ஆஜராகி தங்களது   வாதங்களை முன் வைத்தார்கள், இன்று நீதிமன்றம் முடியும் வரை அவர்கள் தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டது.

    SSLC - 2013-14 - ANSWER KEY FOR QUARTERLY EXAM ENGLISH PAPER - I & II

    தொழில் வரியை உயர்த்த நகராட்சிகளுக்கு அனுமதி

    நகராட்சிகளில் தொழில்வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நகராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வரிசீராய்வு மேற்கொள்ளப்படும்.

    தமிழக ஆரம்ப ப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சென்னையில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்த துண்டறிக்கை

    ஏஸ்.ஏஸ்.ஏ., நிதி 1500 கோடி ரூபாயாக குறைப்பு, மத்திய அரசு நடவடிக்கை

    பள்ளிக்கல்வி - அங்கரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கைக்கான காலகெடு 30.09.2013 வரை நீட்டித்து உத்தரவு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது. 

    போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்கள் 9 பேர் விரைவில் பணி ­நீக்கம் ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை

    போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்து மாந­க­ராட்சி பள்­ளி­களில் ஆசிரியர்க­ளாக உள்ள ஒன்­பது பேர் விரைவில் பணி நீக்கம் செய்­யப்­பட உள்ளனர். ஓரிரு நாளில் அவர்கள் கைது செய்­யப்­ப­டுவர் என, மாந­க­ராட்சி வட்டாரங்கள் தெரி­வித்­தன.

    அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

    அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, அரசின் ஒப்புதலை, துறை கோரியுள்ளது.

    துப்புரவு பணியாளர் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாரிக்க உத்தரவு

    உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் ஆளுங்கட்சி அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசுப்படி நடந்ததாக தாக்கலான வழக்கில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மை செயலர் சி.வி.சங்கர் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    அரசுத்துறை தேர்வுகள் அறிவிப்பு

    டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம்.

    பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிக்கல்வி - எம்.பில்., உயர்கல்வித் தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் குறித்த அரசாணை மற்றும் உயர்நீதிமன்ற ஆணை நகல்

    இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

    இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண்.55ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.55ல் உள்ளதால் இன்று மாலைக்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தொடக்கக் கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2013 முதல் 08.10.2013 முடிய JOY OF GIVING WEEK கொண்டாட இயக்குநர் உத்தரவு

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பயன்படுத்துங்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு

    பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பயன்படுத்தும்படி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

    Tuesday, September 17, 2013

    மன அழுத்தம் வராமல் தடுக்க

    ஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தமிருக்க வாய்ப்புண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ஆசிரியர்களுக்கு இனி அடையாள அட்டை!

    தமிழகத்தில் 538 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கல்லூரிகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை. சாதாரண பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கியே பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கிளே பி.இ வகுப்பை எடுக்க வைக்கின்றனர்.

    10, 12 விடைத்தாள்களில் இனி ரகசிய குறியீடு, அரசுத் தேர்வுத்துறை முடிவு

    எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் முறைகேடுகளை தடுக்க, இனி டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ், ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின்

    அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை: சி.பி.ஐ. விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

    அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு நேற்று ஐகோர்ட்டில் மாற்றுத்திறனாளி வழக்கு தொடர்ந்தார்.

    TNPSC – Departmental Exam Dec 2013 – Online Registration

    DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

    Current Online Registration for...
    (Click to Apply Online)
    NotificationCurrent Status


    Departmental Examinations December 2013



    Tamil | English

    Online up to
    15 Oct 2013

    வினாத்தாளில் பிழை: டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக உத்தரவு

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரிய வழக்கில், "ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

    ரயில்வே துறையில் 1.60 லட்சம் பேர் விரைவில் தேர்வு

    ரயில்வே துறையில் நிரப்பபடாமல் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் காலி பணியிடத்திற்கு வி‌ரைவில் ‌தேர்வு நடத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துணை அமைச்சர் ஆதிர் சவுத்திரி, தெரிவித்துள்ளார்.

    பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதில் தாமதம்

    பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர ஆசிரியர்களாக பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், கட்டட கலை உள்ளிட்ட பாடங்களில், 16,549 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    குழு கலந்தாய்விற்கு கொடுக்கப்படும் தலைப்புகள் எந்த மாதிரியானவை?

    எம்.பி.ஏ., போன்ற படிப்புகளில் சேர மற்றும் பணிக்கான பல நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் தவறாது இடம்பெறும் அம்சம் குழு கலந்தாய்வு. இது ஆங்கிலத்தில் சுருக்கமாக ஜி.டி., என்று கூறப்படுகிறது.

    10ம் வகுப்பு உடனடி தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு

    பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, தத்கல் திட்டத்தின் கீழ், இன்று இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    தொடக்க கல்வித் துறையில் 2004-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்டு பதவி உயர்வின்றி தவிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

    தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் பணி நியமனம் பெற்றுள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    வினாத்தாளில் பிழைகள் இருந்தால் அதற்கு வாரியம் தான் பொறுப்பு


    முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு

    முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில் எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று ஆசிரியர் தேர்வு செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    தேர்வுத் துறையில் அதிரடி மாற்றம்: இனி மதிப்பெண் முகாமில் இருந்து மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் வழியாக அனுப்பவும், மதிப்பீடு முடிந்த 5வது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

    பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதிப்பெண் முகாம்களில் ஆசிரியர்கள் இனி மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் வழியாக அனுப்பினால் போதுமென்றும், பேனா மூலம் எழுதி சீல் வைக்க அவசியமில்லை எனவும், மதிப்பீடு பணி முடிந்த ஐந்தாவது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்வில் மதிப்பெண் முகாம் பட்டியலில் பார்கோடு முறை அமுல்படுத்தப்படுகிறது.

    10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முறைகளை எளிமைப்படுத்த திட்டம்

    Monday, September 16, 2013

    ஏழை மாணவ, மாணவியர் கல்வியறிவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

    "தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தச் மாணவ, மாணவியர் தங்குதடையின்றி கல்வியறிவை பெறும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.

    மொபைல்போன் கொண்டு வந்தால் இடைநீக்கம்: மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

    மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால், "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    படியில் தொங்கி வந்து பள்ளிகளில் படிக்க வேண்டிய அவல நிலை

    கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் தொங்கல் பயணம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காததால், விபத்துக்களும் தொடர்கதையாகி வருகிறது.

    படித்து பட்டம் பெறுவது 55 லட்சம் பேர் வடிகட்டி பார்த்தால் தேறுவது 15 சதவீதம்

    "ஆண்டுக்கு 55 லட்சம் மாணவர்கள் இங்கு படித்து பட்டம் பெறுகின்றனர். இவர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே, வேலை வாய்ப்புக்கு தகுதியானவர்களாக உள்ளனர்" என, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் கோவை மண்டல தலைவர் சுந்தரராமன் பேசினார்.

    பூமியைக் காக்கும் ஓசோன் படலத்தை காப்போம்

    சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு மண்டலத்தில்" தான் ஓசோன் உள்ளது.

    வானியல்: சூரிய மண்டலத்தை தாண்டி சென்ற அமெரிக்காவின் "வாயேஜர்"

    அமெரிக்காவிலிருந்து 36 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட, "வாயேஜர்-1" விண்கலம், சூரிய மண்டலத்தை தாண்டி பயணித்துள்ளது.

    தவறுகளை தடுக்க இயக்குனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அவசியம் தேவை குமுறும் கல்வித்துறை பணியாளர்கள்

    அரசின் அனைத்து துறைகளிலும், செயலர் பதவியில் ஐ.ஏ.எஸ்.,அந்தஸ்து உள்ள அதிகாரிகள் உள்ளனர்.இதே போன்று மற்ற துறை இயக்குனர், தலைவர் பதவியிலும் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளே இடம் பெறுகின்றனர். பள்ளிக்கல்வித்துறையில் மட்டும், முதுகலையுடன் பி.எட், எம்.எட்., படித்த ஆசிரியர்கள்,நேரடி தேர்வு மூலமும் இயக்குனர் பதவி நிரப்பப்படுகிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் 23-இல் பேரணி

    மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் செப்டம்பர் 23-ஆம் தேதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிரியர்கள்

    தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், கழிப் பறை மற்றும் வகுப்பறைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே சுத்தப்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பட்டதாரி ஆசிரியருக்கு உழைப்பூதியம் வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

    "பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆகஸ்ட் மாத உழைப்பூதியத்தை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் தற்போதைய தேவை என்ன?

    இயக்கம் போராடி பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்திய போதிலும் கடந்த, 2002 முதல் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.2003 ல் நிதித்துறை அரசாணை 259 நாள் 06/08/2003 இன் படி பங்கேற்பு ஓய்வூதியம் 01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது.

    வழக்கு தொடுத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன்

    வழக்கு தொடுத்த 1,528 ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    TNPSC -டிசம்பர் -2013 அரசுப் பணியாளர்களுக்கான அரசுத் துறைத் தேர்வுகள் அறிவிப்பு

    தொழிலாளர் வைப்பு நிதி நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீத வட்டியே தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    தொழிலாளர் வைப்பு நிதி கழகத்தின், டிரஸ்டிகளின் மத்திய வாரிய கூட்டம், அடுத்த மாதம், 4ம் தேதி நடக்குமென தெரிகிறது. இதில், வருங்கால வைப்பு நிதி முதலீட்டின், நடப்பாண்டுக்கான வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகிறது.

    Saturday, September 14, 2013

    பள்ளி கல்வித்துறை செயல்பாடு: அமைச்சர் ஆலோசனை

    பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

    புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கம்

    தமிழகத்தில், புதிதாக, 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, "வீடியோ கான்பரன்ஸ்" மூலம் துவக்கி வைத்தார். இக்கல்லூரிகளில், 210 ஆசிரியர் பணியிடம், 238 ஆசிரியர் அல்லாத பிற பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

    சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்தார்.

    அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிப்பவர்கள் பொதுத் தேர்வை எழுத முடியாது: தேர்வுத்துறை திட்டவட்டம்

    காந்திய வழியில் ஒரு பள்ளி! கீதா மற்றும் எம்.செந்தில்குமார்

    மதுரை அருகே உள்ள டி. கல்லுப்பட்டியில் இயங்கி வரும் காந்தி நிகேதன் பள்ளியை, நாட்டில் பாரம்பரியத்தைப் பின்பற்றும் ஐந்து பள்ளிகளில் ஒன்றாக என்சிஇஆர்டி தேர்வு செய்துள்ளது.

    பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுதுபோக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர்

    பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுது போக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரம்பம் மற்றும் உயர்நிலைப்பள்ளித்துறை அமைச்சர் 

    நிதி வழங்கப்படாததால் மாணவ விளையாட்டு வீரர்கள் விரக்தி; "ஊனமான" விளையாட்டு துறையால் சோர்வு

    மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளாக பள்ளி விளையாட்டு போட்டிக்கான நிதி வழங்கப்படாததால் மாணவ விளையாட்டு வீரர்கள் விரக்தியில் உள்ளனர்.

    Friday, September 13, 2013

    பான் கார்டும் அதன் தேவைகளும் - உங்களுக்கு தெரியுமா?

    நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

    போதையில் பள்ளிக்கு தேர்வு எழுத வந்த மாணவன்! பள்ளியில் பரபரப்பு!

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நகரம் மற்றும் அக்கம் பக்கம் கிராமப் புறத்தைச் சேர்ந்த சுமார் 1200 மாணவ மாணவியர் அங்கு பயின்று வருகின்றனர். இதன் தலைமை ஆசிரியர் ஜிந்தா மதார் பக்கீர். தற்போது பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 

    கல்வித் துறையில் சூப்பர் உமன் ஆகிறாரா சபீதா..? - நான்கு அமைச்சர்கள் கல்தா

    வைகைசெல்வனின் தலை உருண்டதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதாவின் கைதான் ஓங்கி இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், சபீதாவைச் சுற்றி இப்போது சர்ச்சைகள் றெக்கைக் கட்டத் தொடங்கியுள்ளன. 

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகர அவசர செயற்குழு கூட்ட தீர்மானங்கள்


     

    தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.09.2013 அன்று SIEMET கூட்டரங்கில் நடைபெறுகிறது

    தொடக்கக் கல்வி - RTE 2009ன் படி அகஇ கீழ் தோற்றுவிக்கப்பட்ட 3565 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 1581 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.12.2012 முதல் 31.12.2013 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு

    ஒரு சரியான வெளிநாட்டு பல்கலையை தேர்வு செய்தல் எப்படி?

    தனக்கான வெளிநாட்டுப் பல்கலையை ஒரு மாணவர் தேடும்போது, கல்வி அனுபவத்திற்கு அப்பாற்பட்டு, தான் விரும்புவது எங்கு கிடைக்கும் என்பதைப் பற்றி தெளிவாக இருக்க வேண்டும். எனவே, அதற்கு ஏற்றாற்போல், அவர் தனக்கான பல்கலையைத் தேர்வு செய்ய வேண்டும்.

    மாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குதாட்கள் விவரம் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம்

    2011-12 ஆம் ஆண்டிற்கான அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்த சந்தா, அரசு பங்களிப்பு அடங்கிய கணக்குத்தாட்கள் விவரம் சம்பந்தப்பட்ட அரசு சார் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    நிதித்துறை அரசாணையில் "தமிழ் பண்டிட்" வார்த்தையால் தமிழாசிரியர்கள் பாதிப்பு

    நிதித்துறை, 2013ல் வெளியிட்ட, அரசாணை எண், 263ல், "தமிழ் பண்டிட்" என்ற வார்த்தையால், தர ஊதியம் பெறுவதில், பட்டதாரி தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதை மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

    ஆசிரியர்களுக்கே தேர்வு!

    தமிழ்நாட்டில் காலாகாலமாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்தான், முதலில் தாய்–தந்தை, அடுத்தது ஆசிரியர்கள், அதன்பிறகுதான் தெய்வம் என்று வணங்கினர்.

    புதிய கேள்வித்தாள் குறித்து சி.இ.ஓ., முடிவெடுக்கலாம்

    மழை காரணமாக, குறிபிட்ட சில மாவட்டங்களில், விடுமுறை அறிவித்தால், அந்த மாவட்டங்களில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கேள்வித்தாள் தயாரித்து, தேர்வை நடத்துவது குறித்து, சி.இ.ஓ.,க்களே முடிவெடுத்து, செயல்படுத்தலாம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும், பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களில், விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.

    2013-14 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்

    மழை விடுமுறை எதிரொலி: பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கு புதிய கேள்வித்தாள்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, மழை காரணமாக, நேற்று விடுமுறை. ஆனால், பிற மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றைய காலாண்டு தேர்வுகள், வழக்கம் போல் நடந்தன. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், புதிய கேள்வித்தாள்கள் அச்சிடப்பட உள்ளன.

    உதவி பேராசிரியர் பணிக்கு செப்.,16ல் சான்றிதழ் சரிபார்ப்பு

    உதவி பேராசிரியர் பணிக்கு, சென்னையில், செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது. தமிழக அரசு கலைக் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

    Thursday, September 12, 2013

    அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி 1.6.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்தி ஓய்வுபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தொ.ப.த.ஆ பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை ஆணை வெளியிட்டதை இரத்து செய்து, தீர்ப்பாணை பெற்ற 1528 நபர்களுக்கு மட்டும் பொருந்தும் என உத்தரவு

    கல்வி அலுவலகங்களில் சிறப்புப் பதிவேடு!

    சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தின்படி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள், தொடக்க, பள்ளிக் கல்வி இயக்ககங்களில் பதிவேடுகள் தயார் செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதிலும் இடதுசாரிகள் இரட்டைவேடம் போடுகின்றனர்

    தொழிலாளர்களை நம்பி கட்சி நடத்தும் இவர்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் இவர்கள் ஆதரவுடன் மத்தியஅரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 2004 ல் அமல்படுத்தப்பட்டபொழுது (மசோதா இப்பொழுது வந்தாலும் நடைமுறைபடுத்துதல் 2004ல் தொடங்கிவிட்டது)

    உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளிகளில் ஒரு நாள் தங்கி ஆண்டாய்வு செய்ய உத்தரவு

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் தங்கி ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடக்கக் கல்வி - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" 2013 தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குநர் உத்தரவு

    பள்ளிக்கல்வி - பள்ளிகளில் தேசிய பார்வையற்றோர் சங்கம் மூலம் பள்ளிகளில் நிதி திரட்ட அரசு அனுமதித்து ஆணை

    மூன்று நபர் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட திருத்திய சிறப்பு ஊதியம் பெறுவது குறித்த அரசின் தெளிவுரை வழங்கி உத்தரவு

    பொது வினாத்தாளை பயன்படுத்த தனியார் பள்ளிகள் தயக்கம்

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும், காலாண்டு தேர்வுக்கான வினாத்தாளை பயன்படுத்த, சில தனியார் பள்ளிகள் தயக்கம் காட்டுகின்றன. அந்த பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பதாரர் நிரந்தர பதிவு விவரங்கள் மாயம்

    டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைனில், நிரந்தர பதிவாளர்களுக்கான விவரங்கள் இல்லாததால், விண்ணப்பதாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி

    ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும், குறைதீர்க்கும் முகாம் நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    தேர்வு தொடர்பான பிரச்னைகள் களைய நவீன வசதிகளுடன் தகவல் மையம்

    தேர்வுத்துறை தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை ஒரே நாளில் தீர்ப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட தகவல் மையத்தை தேர்வுத் துறை அமைக்க உள்ளது.

    வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

    வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, ஓட்டுச்சாவடி மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    புது மந்திரிக்கு நாளை "பாலபாடம்': ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

    பள்ளி கல்வி துறைக்கு, ஐந்தாவது அமைச்சராக, கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள பழனியப்பனுக்கு, நாளை (13ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, துறை அதிகாரிகள், "பாலபாடம்' நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளில், அதிகாரிகள், தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல், ஒரே மாதத்திதில் தேர்வுத் துறை சாதனை (எஸ்கேப் ஆகும் ஆசிரியர் தேர்வுத் துறை கிடுக்குப்பிடி)

    பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்க வலியுறுத்தி செப்.20 ஓய்வூதியர் கூட்டமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

    புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவிற்கு நாடாளு மன்றம் ஒப்புதல் வழங்கி யதைக் கண்டித்து செப்டம் பர் 20 அன்று தமிழகம் முழு வதும் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடத்திட தமிழ் நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.இதுதொடர்பாக கூட்ட மைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    பிளஸ்-2 விடைத்தாளை திருத்த அனுபவம் மிக்க ஆசிரியர்கள் கண்டிப்பாக வரவேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு இயக்குனர் வேண்டுகோள்

    பிளஸ்-2 விடைத்தாள் களை மதிப்பீடு செய்ய அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வரவேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்ப உள்ளார்.

    புறக்கணிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்? ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

    மாவட்ட அளவில் நடக்கும் கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கல்வித்துறை நிராகரித்துள்ளது.

    பணியிடத்தில் மாரடைப்பால் இறந்தால் தொழில்சார்ந்த மரணமாக கருதப்படும்: மும்பை உயர்நீதிமன்றம்

    பணியிடத்தில் ஊழியர் எவரேனும் மாரடைப்பால் இறக்க நேரிட்டால், அதை தொழில்சார்ந்த மரணமாகவே கருதவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைனில், நிரந்தர பதிவாளர்களுக்கான விவரங்கள் இல்லாததால், விண்ணப்பதாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது

    டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நட்ராஜ் இருந்த போது, பல வகை குரூப் தேர்வுகளை, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் ஒரு வசதியாக, "நிரந்தரப் பதிவு' முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    Wednesday, September 11, 2013

    எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை! ! ! !

    இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல்தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

    தொடக்கக் கல்வி - AEEO / AAEEO மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு (ANNUAL INSPECTION) பள்ளிகள் பார்வை சார்பாக அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு

    வாழ்நாளில் 10 மரங்கள் வளர்க்க முன்னாள் ஜனாதிபதி கலாம் அறிவுரை

    ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டுமானால், வாழ்நாளில், 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை வழங்கினார்.

    ஆசிரியர் படிப்பிற்கு முழுத்தொகையையும் கல்வி கடனாக வழங்க வேண்டும்: பாராளுமன்றத்தில் ஆரூண் எம்.பி. பேச்சு

    தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆரூண் எம்.பி. பாராளுமன்றத்தில் பேசும்போது எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. படிப்பிற்கு வருடத்திற்கு கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    பாரதியின் பாட்டு நமது படையை வழிநடத்தும்! - மதுக்கூர் இராமலிங்கம்

    மகாகவி பாரதியின் வாழ்க்கையை புதுக்கவிதையில் காவியமாக ‘கவிராஜன் கதை’ என்ற பெயரில் வரைந்த கவிஞர் வைரமுத்து, முடிப்பு பகுதியில் இப்படிக் கூறியிருப்பார்:

    சிபிஎஸ்இ: இந்தாண்டு முதல் ஓபன் புக் முறையில் பாடம்

    சிபிஎஸ்இ பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் 'ஓபன் புக்' எனப்படும் திறந்த புத்தக தேர்வு முறையின்படி பாடம் நடத்தப்பட உள்ளது.

    மாணவர்களுக்கு விடுமுறை விட்டாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வர உத்தரவு

    டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் கோளாறு : பட்டதாரிகள் தவிப்பு

    துணைவணிக அதிகாரி நகராட்சி கமிஷனர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1064 காலியிடங்களூக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி முதல் விண்ணபிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது.

    10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

    பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.

    தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை: முடிவுகள் வெளியிட தடை - Dinamalar

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது; தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு

    நள்ளிரவு முதல் கனமழை தொடர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் +1, +2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் என்றும்,

    தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் பெரும் மாற்றம் : கிராமப்புற மாணவர் சிரமம் குறையும்

    தனித்தேர்வு கட்டணங்களை, வங்கியில் செலுத்தும் முறையில் உள்ள, சிரமங்களை நீக்கி, நேரடியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள, பணியாளர்களிடம் வழங்குவதற்கு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த பணிகளை கவனிக்க, இயக்குனரகத்தில் இருந்து பணியாளர்கள், பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    பி.எட்., கல்லூரிகள் வருகைப்பதிவு விபரம்: மின்னஞ்சல் அனுப்ப உத்தரவு

    பி.எட்., கல்லூரிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவு விபரங்களை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கு, தினமும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, அப்பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

    Tuesday, September 10, 2013

    பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை" ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தி தமிழக அரசு உத்தரவு

    தொடக்கக் கல்வி - EMIS - மாணவர்களின் விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய குறைகளை உடனுக் -குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயக்குநர் உத்தரவு

    தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்க, பள்ளிகளின் பெயர் பட்டியல் முன்னுரிமை அடிப்படையில் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

    முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.

    தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அண்மையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ் பாடத்திற்கான வினாத்தாளில் 47 வினாக்கள் பிழையுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    தொடக்கப்பள்ளிகளில் ஆய்வு, இயக்குனர் உத்தரவு

    நாட்டின் அதிக கல்வியறிவு மாநிலம்: கேரளாவை வீழ்த்தியது திரிபுரா

    "நாட்டில், அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி, திரிபுரா மாநிலம், முதல் இடத்தை அடைந்து உள்ளது" என அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர், மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.

    சான்றிதழ் இன்றி 4,000 மாணவர்கள் பாதிப்பு: முதல்வர் உத்தரவுக்காக காத்திருப்பு

    ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி மக்களுக்கு, சான்றிதழ் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலைவாழ் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேலை கிடைத்தும் இடம் கிடைக்கவில்லை: தவிப்பில் 150 இளநிலை ஆய்வாளர்கள்

    கூட்டுறவு துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, நியமன ஆணை பெற்றும், ஆறு மாதமாக பணியில் சேர முடியாமல், 150 பேர், அவதிப்பட்டு வருகின்றனர்.