Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 7, 2013

    இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?

    மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக் கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.

    தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இருந்து வருவதால் தமிழக அரசு 2010 மே மாதம் 32 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனத்திற்கு வேண்டி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. தேசிய கல்வி கழகத்தின் அறிவுறுத்தல்படி தமிழக அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு தகுதித்தேர்வை அறிவித்தது.

    (15.11.2011) திருமங்கலத்தை சேர்ந்த மாயா உட்பட மூவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் போட்டதன் பேரில் பழைய பதிவு மூப்பு அடிப்படையிலேயே இடைநிலை ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்று 2011 நவம்பர் 24இல் மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பாணை எண் 5281/ஆ4/2010 (பார்வை: 1.அரசாணை (நிலை) எண்.220 பள்ளிக்கல்வித் (எஸ்-2)துறை,நாள் 10.11.2008, 2.அரசாணை (நிலை) எண்.153 பள்ளிக்கல்வித்(வ.செ-2)துறை,நாள் 03.06.2010, எனக் குறிப்பிட்டு 2010-11ஆம் ஆண்டு தொடக்கக் கல்வித்துறை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்க்கும் அழைப்புக் கடிதத்தை அதே 2011 நவம்பர் 24 தேதியில் அனுப்பியது. மேற்கண்ட அழைப்பின்பேரில் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 3.12.2011இல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து வேலைவாய்ப்பு உத்தர விற்காகக் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் 9.7.2013 அன்று சென்னை உயர் நீதிமன்றம் 2010 மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தகுதித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    இதையே அறிவுறுத்தலாகக் கொண்டு 2011 இல் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் தமிழக அரசு பணியில் அமர்த்துவதுதான் சரியானதாக இருக்க முடியும். தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காய் என்ற முறையில் ஓர் அரசு நடந்து கொள்ள முடியாது.

    இந்தப்பிரச்சினை குறித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றினை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியிட்டார் (விடுதலை 2.4.2013).

    தொடர்ந்து விடுதலை இந்தத் திசையில் பல தலையங்கங்களைத் தீட்டியதுண்டு. இதுகுறித்து கடந்த 6ஆம் தேதியன்று முதல் அமைச்சருக்குத் திறந்த மடலையும் எழுதியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.

    தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    கடந்த 5ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாணவரணி சார்பில் கருத்தரங்கமும், பொது மாநாடும் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் உட்பட பல தலைவர்களும், கல்வியாளர்களும் கலந்து கொண்டனர். முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    கடந்த10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவிலும் இந்த வகையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட் டுள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னையில் இது தொடர்பான ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்திட உள்ளது. இதற்கிடையே இதனை வலுப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஆதாரப்படுத்தி தகுதித் தேர்வைப் புறந்தள்ளி, பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்வதே சரியானதாக இருக்க முடியும். இல்லையெனில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றால் அரசுக்கு எதிராகவே தீர்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா? எங்கே பார்ப்போம்.

    No comments: