Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 12, 2013

    குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?

    மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள்.
    இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள் சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள். பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல மருந்தினை எடுத்துக்கொள்ளலாம். தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து 1ஸ்பூன் அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடவேண்டும். குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும். அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    No comments: