Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, December 3, 2013

    சி.பி.எஸ்.இ நடத்தும் மருத்துவ நுழைவுத்தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31

    மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ., அமைப்பால் நடத்தப்படும் 2014ம் ஆண்டிற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள்.


    அதேசமயம், அபராத கட்டணத்துடன், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த நுழைவுத்தேர்வு, 15% அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் மற்றும் பங்குபெறும் மாநிலங்கள், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் கீழ்வரும் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படுகிறது.

    இத்தேர்வு, மொத்தம் 3 மணிநேரம் நடத்தப்படும். இத்தேர்வை எழுத குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 25. அதேசமயம் SC/ST/OBC போன்ற பிரிவினருக்கு கூடுதலாக 5 வயதுவரை சலுகை உண்டு.

    இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க www.aipmt.nic.in என்ற இணையதளம் செல்ல வேண்டும். இத்தேர்வு அடுத்தாண்டு மே மாதம் 4ம் தேதி நடத்தப்படுகிறது.

    விண்ணப்பித்தல் செயல்பாட்டில் உதவி தேவையென்றால், உதவி மையங்களை மாணவர்கள் அணுகலாம். அத்தகைய உதவி மையங்களைப் பற்றிய விபரங்கள் www.aipmt.nic.in என்ற வலைதளத்தில் கிடைக்கின்றன.

    கட்டண விபரங்கள்

    * அபராதம் இல்லாமல், கட்டணம் கட்ட வேண்டிய கடைசித் தேதி டிசம்பர் 31. அதேசமயம், அபராத தொகையுடன், கட்டணத்தை கட்டுவதற்கான கடைசித் தேதி அடுத்தாண்டு ஜனவரி 31.

    * பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் - ரூ.1,000

    அபராதத்துடன் செலுத்தினால் ரூ.2,000

    * SC/ST/PH பிரிவு மாணவர்களுக்கான சாதாரண கட்டணம் - ரூ.550

    அபராதத்துடன் செலுத்தினால் ரூ.1,550.

    முக்கிய தேதி விபரங்கள்

    * தேர்வு நடைபெறும் தேதி - மே 4, 2014.

    * விண்ணப்ப செயல்பாடு தொடங்கிய தேதி - டிசம்பர் 1

    * ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - ஜனவரி 10, 2014.

    * அபராதத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - 5 பிப்ரவரி, 2014.

    கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட இதர அனைத்து விபரங்களையும் அறிய http://aipmt.nic.in/aipmt/ShowPdf.aspx?Type=BF0F90D7E8E015A04E4D25DB4241E3A0A054D790&ID=DA4B9237BACCCDF19C0760CAB7AEC4A8359010B0.

    No comments: