Pages

Thursday, December 19, 2013

21.12.2013 அன்று விடுமுறையா, வேலை நாளா? தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் குழப்பம்

சிவகங்கை மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் கடந்த சில நாட்களாக குறுந்தகவல்கள் ஆசிரியர்களை குழப்பி வருகிறது. பள்ளி வேலை நாட்கள் பொதுவாக மாவட்டத்திற்கு ஏற்ப மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களே திட்டமிடும் வழக்கம்தான் இது நாள் வரை இருந்து வருகிறது.
ஆனால் நேற்று சில ஒன்றியங்களில் 21.12.2013 அன்று சனிக்கிழமை வேலை நாள் இல்லை என அறிவித்து அந்த செய்தி குறந்தகவல்களாக மாவட்டம் முழுமையும் உள்ள ஆசிரியர்களுக்கு பரப்பப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அளித்துள்;ள விடுமுறை பட்டியலில் 21.12.2013 அன்று சனிக்கிழமை வேலை நாளாகவும், தேர்வு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரை தொடர்புகொண்டு கேட்டபொழுது, பள்ளி வேலை நாளை பொறுத்தவரை அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களிடமும் காலண்டர் கொடுத்துள்ளேன் அதை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தியுள்ளேன் என நம்மிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக உதவித் தொடக்க்கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டால் ஒவ்வொருவரும் மாறுபட்ட பதிலை தருகிறார்கள். புதிய காலண்டர் வருங்காலங்களிலதான் பயன்படுத்த வேண்டும் எனவும் தற்பொழுது பழைய விடுமுறை பட்டியலே தொடரும் எனவும் சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும், இல்லை புதிய காலண்டர்படி சனிக்கிழமை விடுமுறை என சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களும் முரண்பட்டு கருத்து தெரிவிக்கின்றனர். இந்த குழப்பமான சூழலில் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில ஒன்றியங்களில் வருகிற 21.12.2013 அன்று சனிக்கிழமை விடுமுறை அறிவித்து  சனிக்கிழமை நடைபெற உள்ள தேர்வுகள் இன்று நடத்தப்பட்டுள்ளது. மற்ற ஒன்றியங்களில்  பழைய விடுமுறை பட்டியல்படி சனிக்கிழமை வேலை நாளாகவும், தேர்வு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்குள் நிகழ்ந்துள்ள குழப்பத்தால் ஆசிரியர்கள் குழம்பி நிற்கின்றனர் என்பதுதான் உண்மை. வருங்காலங்களில் இந்த குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நம் அவா.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.