Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 4, 2013

    பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 200 புதிய மையங்கள்

    அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவால் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    2013-14ம் கல்வியாண்டிற்கான 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு உள்ளது. மாணவர்களுக்கு இடநெருக்கடி போன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஒரு மையத்தில் 400 மாணவர்கள் வரை மட்டுமே தேர்வு எழுத வேண்டும். 20 பேர் (20க்கு 20 அளவு) எழுதும் அளவில் தேர்வறையை பிரிக்க வேண்டும், என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும், பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கடந்த ஆண்டை விட, இந்தாண்டு 10 முதல் 20 மையங்கள் வரை அதிகரித்திருப்பது குறித்தும், அதற்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது பற்றி இணை இயக்குனர்கள் விவாதித்தனர்.

    No comments: