Pages

Sunday, November 24, 2013

புதிய UNION OF TEACHERS ORGANIZATION (UTO) இயக்க கூட்டமைப்பு உதயம்

இன்று திருச்சி மாநகரில்  ( UTO ) UNION OF TEACHERS  ORGANIZATION  இயக்க கூட்டமைப்பு உதயம். இடைநிலை ஆசிரியர்களின்  கோரிக்கைகளுக்குகாக மட்டுமே உருவாக்கப்பட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் ஹோட்டல் அருண், மத்திய பேருந்து நிலையம் அருகில் திருச்சியில் நடைபெற்று முடிந்தது .கூட்டத்தில், தமிழக ஆசிரியர் மன்றம் (TAM), ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (JSR), தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA), தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் (TAAS), ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (AMS) ஆகிய 5 சங்கங்கள் பங்குபெற்றன.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: இக்கூட்டமைப்பு "ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு" UNION OF TEACHERS ORGANIZATION -('U'TO) என அழைக்கப்படும் . U'TO தலைமை தொடர்பாளராக திரு .ஜெகநாதன், பொதுச்செயலாளர், ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நிதிக்காப்பாளராக திரு.தே.தயாளன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர.
கோரிக்கைகள் 
1). நடுவண் அரசுக்கு இணையான 9300+4200 அடிப்படை ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு  வழங்க வேண்டும்.
2). ஆசிரியர்கள்-அரசூழியர்களின் எதிர்காலத்தை இருண்டகாலமாக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.   
தீர்மானம்  
1). ஒத்த கருத்துடைய ஆசிரியர் இயக்கங்கள் இந்த UTO  இயக்க கூட்டமைப்பில் சேர  அன்பான அழைப்பு.  
இவண் -( UTO ) UNION OF TEACHERS  ORGANIZATION  இயக்க கூட்டமைப்பு

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.