சூப்பர் மார்க்கெட்கள், பெட்ரோல் பங்க்குகள், கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது டெபிட் கார்டில் பணம் செலுத்துபவர்கள் இனி, PIN நம்பரை பதிவு செய்ய வேண்டியிருக்கும். நாளை மறுநாள் முதல், அதாவது டிசம்பர் 1-ம் தேதி முதல் இதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.
டெபிட் கார்டுகளில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. கடைகளில் இடம்பெறும் பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் PIN நம்பரை பதிவு செய்தால் மட்டுமே இனி ஷாப்பிங் செய்ய அனுமதிக்கப்படும்.
எனவே, டெபிட் கார்டில் ஷாப்பிங் செய்யச் செல்லும்போது கார்டு மட்டுமின்றி PIN நம்பரும் நினைவில் கொள்வதுடன், அதை மற்றவர்கள் பார்க்காத வகையில் பதிவு செய்வதும் அவசியம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.